2026 19ஆவது ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருக்கிறார்.
இந்த முறை டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் சுப்மன் கில் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டார். அவர் அதிரடியாக விளையாட முயற்சி செய்யும் பொழுது தனது விக்கெட்டை தொடர்ந்து இழந்து வந்தார். இதன் காரணமாக அதிரடி முடிவு எடுக்கப்பட்டு அவர் நீக்கப்பட்டார்.
அவர் ஒரு டான் மாதிரி
இதைத்தொடர்ந்து இந்த ஐபிஎல் தொடரில் சுப்மன் கில் வழக்கம்போல் அதிரடியாக விளையாடிய 600க்கும் மேற்பட்ட ரன்கள் எடுக்கும் பொழுது அவரால் இந்திய டி20 அணிக்கு மீண்டும் திரும்பி வர முடியும். இந்திய கிரிக்கெட் வாரியமும் அவர் திரும்பி வருவதை விரும்புகிறது.
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “சுப்மன் கில்லை அகமதாபாத் மைதானத்தில் அவுட் செய்வது இப்போது எல்லாம் மிகவும் கடினமாகிவிட்டது. அங்கு அவர் ஒரு டான் போல மாறிவிட்டார். அதனால் அவர் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை என்று நான் நினைக்கிறேன்”
அவர் இதை செய்ய வேண்டும்
“நான் அவருடைய இடத்தில் இருந்தால் மீண்டும் மைதானத்திற்கு சென்று ரன்கள் அடிக்க வேண்டும் என எனக்கு நானே சொல்லிக் கொள்வேன். நீங்கள் அதிக ரன்கள் எடுப்பது மட்டுமே உங்கள் இடத்தை உறுதியாக வைத்துக் கொள்வதற்கான ஒரே சிறந்த வழி. அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பார்”
இதையும் படிங்க: ஐபிஎல்-ல் இந்த விஷயம் எனக்கு பிடிக்கவே பிடிக்காது.. பொறுத்துக்கிட்டு ஃபாலோ பண்றேன் – அக்சர் படேல் பேட்டி
“சுப்மன் கில் ஸ்ட்ரைக் ரேட்டை மனதில் வைத்து விளையாடும் பொழுது அவுட் ஆகிறார். அவர் அதை மனதில் இருந்து எடுத்துவிட்டு அவருடைய இயல்பில் விளையாடினால் அவரிடம் என்ன ஷாட் இல்லாமல் போகிறது? அவரிடம் எல்லாமே இருக்கிறது. எனவே ஸ்ட்ரைக் ரேட் குறித்து கவலைப்படாமல் அவர் விளையாட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






