தற்போது சிஎஸ்கே அணியிலிருந்து காயம் காரணமாக விலகிய நாதன் எல்லிசுக்கு மாற்று வீரர் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.
சிஎஸ்கே அணியில் தற்போது நாதன் எல்லீஸ் மட்டுமே இறுதி கட்ட ஓவர்களில் பந்து வீசக்கூடியவராக இருந்தார். அவர் சில நாட்களுக்கு முன்பு காயத்தின் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியது சிஎஸ்கே அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது.
பாகிஸ்தானுக்கு தலைவலி
ஐபிஎல் தொடர் நடக்கும் நேரத்தில் பாகிஸ்தானில் பிஎஸ்எல் தொடரும் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் பிஎஸ்எல் தொடருக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் தொடர்ந்து அங்கிருந்து விலகி ஐபிஎல் தொடருக்குள் வந்து கொண்டிருப்பது அவர்களுக்கு பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது.
ஏற்கனவே கொல்கத்தாவில் காயம் காரணமாக விலகிய பதிரனாவுக்கு பதிலாக முசரபாணி, ராஜஸ்தானிலிருந்து காயம் காரணமாக விலகிய சாம் கரனுக்கு பதிலாக டசன் சனகா ஆகியோர் பிஎஸ்எல் தொடரில் இருந்து விலகி வந்திருக்கிறார்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சிஎஸ்கேவுக்கு புதிய வீரர்
இந்த நிலையில் தற்போது சிஎஸ்கே அணியில் இருந்து விலகிய நாதன் எல்லீஸ்க்கு பதிலாக ஆஸ்திரேலியா இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார் என்று செய்திகள் கூறுகிறது.
இதையும் படிங்க: விராட் கோலி இல்லை.. ஆர்சிபில் என் வெற்றிக்கு முக்கிய காரணம் இவர் தான்.. அந்த வேலையை செய்ய வச்சார் – குர்னால் பாண்டியா பேட்டி
இவரும் பாகிஸ்தான் பிஎஸ்எல் தொடரில் இருந்து விலகி ஐபிஎல் தொடருக்குள் வருகிறார். கடந்த மினி ஏலத்தில் எந்த அணியும் இவரை வாங்கவில்லை. இந்த நிலையில் தற்போது சிஎஸ்கே இவரை வாங்கியுள்ளது.






