நான் என்னோட மங்கூஸ் பேட்டை பரிசளிக்க விரும்பினால் அது நிச்சயம் இவருக்காக தான் இருக்கும்.. அவரிடம் அந்த திறமை இருக்கு – சிஎஸ்கே முன்னாள் வீரர்

0
37

19 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்த சூழ்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக பொறுப்பேற்றிருக்கும் சிஎஸ்கே மற்றும் ஆஸ்திரேலியா முன்னாள் ஜாம்பவான் வீரரான மேத்யூ ஹைடன் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆஸ்தான தொடக்க வீரராகத் திகழ்ந்த ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன் சிஎஸ்கே முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். அப்போது அவர் வைத்திருக்கும் மங்கூஸ் பேட் மிகவும் பிரபலமாக இருந்தது. அந்த சமயத்தில் அவர் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸர்களும் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்தன.

இந்த சூழ்நிலையில் தற்போது குஜராத் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பொறுப்பேற்றிருக்கும் ஹைடன், இதன் தொடக்க விழாவில் சில சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அப்போது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் உங்கள் மங்கூஸ் மட்டையை யாருக்கு பரிசளிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் குஜராத் அணியின் ஆல் ரவுண்டரான ராகுல் திவாட்டியாவிடம் ஒப்படைக்க விரும்புவதாக பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “குஜராத் அணியை சேர்ந்த ஒருவரிடம் நான் எனது மங்கூஸ் மட்டையை பரிசளிக்க விரும்புகிறேன் என்றால் அது நிச்சயம் ஆல் ரவுண்டர் ராகுல் டிவாட்டியாவிடம் தான் இருக்கும். அவரிடம் நிச்சயம் அந்த திறன் இருக்கிறது. அது உனக்கு நிச்சயமாக கை கொடுக்கும் நண்பா என்று பேசி இருக்கிறார்.

அவரைத் தொடர்ந்து குஜராத் அணியின் மற்றொரு ஆல் ரவுண்டர் வீரரான கிளின் பிலிப்ஸ் கேட்ச் குறித்து பேசும்போது “எளிதான கேட்ச் வாய்ப்புகள் எனது பக்கம் வரும்போது அது எனக்கு கவலையாக இருக்கும். கடின கேட்ச் வாய்ப்புகளை நிச்சயம் பிடிப்பேன் என்று தெரியும். ஆனால் எளிதான வாய்ப்புகள் வரும்போது அது எனக்கு கவலையை கொடுக்கின்றன” என்று நகைச்சுவையாக பேசியிருக்கிறார்.

- Advertisement -