வருண் சக்கரவர்த்தியின் பவுலிங் மர்மம் முடிந்துவிட்டது.. எதிரணிகள் பயப்படாது.. இதை கண்டுபிடிக்க வேண்டும் – அஸ்வின் வலியுறுத்தல்

0
8
Ashwin

தற்போது இந்திய மர்ம சுழல் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தியின் பவுலிங் புதுமை குறைந்து விட்டதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.

நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் வரும் சக்கரவர்த்தியின் பந்துவீச்சில் எதிரணிகள் அதிரடியாக விளையாடிய ரன்கள் குவித்தார்கள். அவரது பந்து வீச்சால் முன்பு போல பெரிய தாக்கத்தை உலகக் கோப்பை தொடரில் ஏற்படுத்த முடியவில்லை.

- Advertisement -

கவலைப்பட மாட்டார்கள்

இந்த நிலையில் அடுத்த துவங்க இருக்கும் ஐபிஎல் தொடரில் அவர் பந்து வீச்சு குறித்து எதிரணிகள் பெரிய அளவில் கவலைப்பட மாட்டார்கள் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்திருக்கிறார். எனவே இதற்கான பதிலை கண்டறிய வேண்டும் என அறிவுரை கூறியுள்ளார்.

இதுகுறித்து அஸ்வின் பேசும்போது “கேகேஆர் பவுலிங் யூனிட்டை பார்த்து எதிரணிகள் பெரிய அளவில் கவலைப்பட மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்களுடைய பந்துவீச்சில் இருந்த மர்மம் மற்றும் புதுமை இரண்டும் பயத்தை உருவாக்கக் கூடியதாக இருக்கும். ஆனால் தற்போது இவையெல்லாம் வருண் மற்றும் நரைன் பந்துவீச்சில் குறைந்து போய்விட்டது”

- Advertisement -

தாக்க நினைப்பார்கள்

“வருண் தன்னுடைய கரியரில் ஒரு கட்டத்தில் இருக்கிறார். அவர் சில பதில்களை கண்டறிய வேண்டிய நிலை வந்துள்ளது. இது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையிலும் முன்னேற்றத்திலும் இயல்பாக வரக்கூடிய காலகட்டம். எனக்கு தோன்றுவது என்னவென்றால் அவருடைய பந்து வீச்சில் புதுமை குறைந்துவிட்டது”

இதையும் படிங்க : 1000 ரூபாய் அபராதம்.. உள்நாட்டு வீரர்களுடன் ஆட்டோ பயணம்.. இஷான் கிஷான் SRH கேப்டன் ஆனது இப்படிதான் – பயிற்சியாளர் விளக்கம்

“சுனில் நரைன் தன்னுடைய பவுலிங் ஆக்சன் காரணமாக வேகமான பந்தை இனி வீச முடியாது. ஈடன் கார்டன் ஒரு சிறிய மைதானம். எனவே எதிரணிகள் இவர்கள் நம்மை பயமுறுத்த மாட்டார்கள் நாம் இவர்களை தாக்கி விளையாடலாம் என்று முடிவு செய்வார்கள்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -