இந்த மாதம் இறுதியில் தொடங்க இருக்கும் 19ஆவது ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சன் என்ன மாதிரியான பொறுப்பை வகிப்பார் என்பது குறித்து அனில் கும்ப்ளே பேசி இருக்கிறார்.
நீண்ட வருடங்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சஞ்சு சாம்சன் கேப்டன் பொறுப்பை வகித்து வந்தார். இந்த நிலையில் இந்த முறை டிரேடிங் முறையில் அந்த அணியில் இருந்து சிஎஸ்கே அணிக்கு அவர் மாற்றப்பட்டு இருக்கிறார்.
பெருமை மாற்றம்
சிஎஸ்கே அணியின் முகமாக விளங்கும் மகேந்திர சிங் தோனி விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக இருக்கிறார். தற்போது அப்படியே அவருடைய இடத்தை நிரப்பக்கூடியவராக விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் வந்திருக்கிறார். மேலும் சஞ்சு சாம்சனுக்கு தமிழ் நன்றாகவே தெரியும் என்பது நெருக்கத்தை இன்னும் அதிகரிக்கிறது.
இதுகுறித்து அனில் கும்ப்ளே பேசும்பொழுது ” கிரிக்கெட் ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்கு மாறுகிறது. கவாஸ்கர், சச்சின், விராட் கோலி என்று மாறிவந்தது. கங்குலி, ராகுல் டிராவிட் இருந்தார்கள். அடுத்து தோனி, விராட் கோலி வந்தார்கள். தற்போது இப்படியான பெருமையான மாற்றமாக தோனி இருக்கும் அணிக்கு சஞ்சு சாம்சன் வந்திருக்கிறார்”
அவருக்கு தமிழ் தெரியும்
“அப்போது இந்த அணிக்கு ருதுராஜ் தொடர்ந்து கேப்டனாக இருப்பார் என்று நினைக்கிறேன். அதே சமயத்தில் சஞ்சு சாம்சன் துணை கேப்டனாக இருப்பார். இந்த ரோல் அவருக்கு மிகவும் சரியாக இருக்கும். தோனி இவருக்காக விளையாடாமல் இருந்து விக்கெட் கீப்பிங் பொறுப்பை கொடுத்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்”
இதையும் படிங்க : ரோகித் சர்மாவுக்கு அந்த திறமை இல்லாததால.. அவரை நான் இம்பாக்ட் பிளேயரா தான் பயன்படுத்த முடியும் – மும்பை கோச் அதிரடி
“ஒருவேளை ருதுராஜ் காயமடைந்து விளையாட முடியாவிட்டால் கூட தோனி கேப்டனாக இருக்க மாட்டார். சஞ்சு சாம்சன் கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொள்வார். தற்போது டி20 உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருப்பதும், மேலும் அவருக்கு தமிழ் தெரியும் என்பதும் பெரிய நெருக்கத்தை அணி ரசிகர்களுடன் உருவாக்கும்” என்று கூறி இருக்கிறார்.






