சதம் அடிக்க ஆசைப்பட்டது உண்மை.. ஆனா 2024 இலங்கையில கம்பீர் பேசின விஷயத்தால செய்யல – சாம்சன் பேட்டி

0
9
Sanju

நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் தான் சதம் அடிக்க விரும்பினேன் எனவும், ஆனால் சில முக்கியமான விஷயத்தை நினைத்து அதை மாற்றிக் கொண்டதாகவும் சஞ்சு சாம்சன் கூறியிருக்கிறார்.

2026 டி20 உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து மூன்று முறை சதம் அடிக்கும் வாய்ப்பு சஞ்சு சாம்சனுக்கு கிடைத்தது. ஆனால் அவர் தொடர்ந்து அணிக்காக அதிரடியாக விளையாட முயன்று மூன்று சதங்களையும் தவறவிட்டார்.

- Advertisement -

2024ல் ஆரம்பித்தது

இந்த நிலையில் சதத்துக்கு அருகில் செல்லும் பொழுது ஒரு மனிதனாக தனக்கும் சதம் அடிக்க ஆசை இருந்ததாகவும், ஆனால் அணியின் உறுதிமொழிக்காக அதை தான் செய்யவில்லை என்றும் சஞ்சு சாம்சன் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசும்பொழுது “2024 ஆம் ஆண்டு இலங்கை டி20 தொடரில் கம்பீர் சூரியகுமார் இணைந்ததில் இருந்து தனிப்பட்ட சாதனைகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது என தொடர்ந்து அணி கூட்டத்தில் பேசப்பட்டது. நாங்கள் யாரும் இப்படி செய்யக்கூடாது என்கின்ற சிந்தனை அங்கிருந்து எங்களுக்குள் விதைக்கப்பட்டது”

- Advertisement -

சதம் அடிக்க விரும்பினேன்

“நான் மூன்று சதங்களை தவறவிட்டதாக சொல்லும்போது நான் மிகப்பெரிய பங்களிப்பை செய்ததாக உணர்கிறேன். நான் தவறவிட்ட அந்த சதங்களைப் பற்றி நினைக்கவே இல்லை என்று சொல்ல மாட்டேன். ஒரு மனிதனாக ஒரு சதம் அடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். நீங்கள் இருந்தாலும் அதை யோசிப்பீர்கள்”

இதையும் படிங்க : ஐசிசி கோப்பைகளை திருட போறீங்களா?.. கடவுளே எங்க பாகிஸ்தான் கிரிக்கெட்டை காப்பாத்துங்க – கம்ரன் அக்மல் வேதனை

“அந்த நேரத்தில் எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன். நீ இந்த அணுகு முறையில் விளையாடி தான் இவ்வளவு ரன்கள் எடுத்திருக்கிறாய், எனவே தொடர்ந்து அதே அணுகு முறையில் விளையாடுவது தான் சரி என்று சொல்லிக் கொண்டேன். பிறகு நான் சதம் குறித்து யோசிக்கவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -