இந்திய நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி கொண்டாட்டத்தின் போது தேசிய கொடியை அவமதித்ததாக குஜராத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
இந்திய அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் குஜராத் அஹமதாபாத் மைதானத்தில் 96 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் ஆனது. இதைத்தொடர்ந்து இந்திய வீரர்கள் கொண்டாட்டங்களில் மைதானங்களில் ஈடுபட்டார்கள்.
ஹர்திக் பாண்டியா கொண்டாட்டம்
இந்திய வீரர்களில் ஹர்திக் பாண்டியா அதிகபட்சமான கொண்டாட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டார். அவருடன் இணைந்து இஷான் கிஷான் நடனம் ஆடினார். இந்த கொண்டாட்டத்தின் போது ஹர்திக் பாண்டியா தேசிய கொடியை தன்னுடைய முதுகில் போர்த்தி இருந்தது.
ஹர்திக் பாண்டியா உடன் எல்லா நேரத்திலும் அவருடைய காதலியும் இருந்து வந்தார். மேலும் ஒரு கட்டத்தில் ஹர்திக் பாண்டியா தேசிய கொடியை போர்த்தியபடி மேடையில் படுத்திருந்த அவருடைய காதலி பக்கத்தில் அவரும் படுத்து எழுந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் நிறைய சர்ச்சை ஆனது.
வழக்குப்பதிவு
தற்போது குஜராத்தைச் சேர்ந்த வாஜித் கான் என்ற வழக்கறிஞர் ஹர்திக் பாண்டியா இவ்வாறு தனது காதலியுடன் தேசிய கொடியை போர்த்திக் கொண்டு மேடையில் படுத்தது தேசியக்கொடியை அவமதிப்பது என்று கூறி சிவாஜி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்திருக்கிறார்.
இதையும் படிங்க : கபில் தேவ், தோனி ஜெயிச்ச பட்டங்களை ஒப்பிட்டா.. இந்த t20 உலக கோப்பை ஒன்னுமே இல்லை.. இந்திய முன்னாள் வீரர் அதிரடி
இவ்வாறான முறையில் நடந்து கொள்வது தேசியக் கொடியை அவமதிக்கும் சட்டத்தின் கீழ் வருவதாக தெரிவித்திருக்கும் அவர், இதற்காக ஹர்திக் பாண்டியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். தற்போது இது ஹர்திக் பாண்டியாவுக்கு சிக்கலை உண்டாக்கியுள்ளது.






