கடவுள் எனக்காக வேறு திட்டம் வைத்திருந்தார்.. சச்சின் ஸாருடன் நிறைய பேசினேன்.. அதுதான் உதவி செய்தது – சஞ்சு சாம்சன் பேச்சு

0
6
Sanju

இன்று டி20 உலக கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் இந்திய அணி 96 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தில் என்று சாம்பியன் ஆனது. மேலும் இந்த உலகக் கோப்பை தொடரில் தொடர் நாயகனாக சஞ்சு சாம்சன் அறிவிக்கப்பட்டார். அவர் இந்த தொடர் தனக்கு எப்படி இருந்தது? என்று கூறியிருக்கிறார்.

இன்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் தொடர்ந்து மூன்றாவது முறையாக அரை சதம் அடித்து 46 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார். அவர் பேட்டிங்கில் கடந்த மூன்று போட்டிகளாக கொடுத்த சிறப்பான துவக்கமே இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

சொல்ல வார்த்தைகள் இல்லை

இதுகுறித்து சஞ்சு சாம்சன் பேசும் பொழுது ” இந்த உணர்வு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது குறித்து சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. என்னுடைய இந்த பயணம் உண்மையைச் சொன்னால் இரண்டு வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது. 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை இந்திய அணியின் ஒரு போட்டி கூட விளையாடாமல் இருந்தேன். அப்போது இதையெல்லாம் கற்பனை செய்து கொண்டு தொடர்ந்து கடுமையாக உழைத்தேன்”

“கடைசியாக நியூசிலாந்து தொடருக்கு பிறகு நான் மனம் உடைந்து விட்டேன். என் கனவுகள் சிதறி போனதாக நான் உணர்ந்தேன். அப்போது நான் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். கடவுள் எனக்கு வேறு திட்டங்கள் வைத்திருந்திருக்கிறார். பெரிய கனவுகள் கண்ட தைரியத்திற்கு அவர் எனக்கு பரிசளித்திருக்கிறார்”

- Advertisement -

சச்சின் ஸாருடன் பேசினேன்

“இந்த நிலையில் பல முன்னாள் வீரர்கள் தொடர்பு கண்டு உதவி செய்ய வந்தார்கள். நான் தொடர்ந்து சச்சின் ஸாருடன் நிறைய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு. அவரைப் போன்ற ஒருவர் ஆலோசனைகள் தந்து வழிகாட்டுவதை விட வேறு என்ன இருக்கப் போகிறது?!”

இதையும் படிங்க : 6 மெகா சாதனைகள்.. 3வது முறையாக டி20 உலக கோப்பையை வென்று இந்தியா சாதனை.. அகமதாபாத்தில் மாறிய வரலாறு

“தற்போது என்னை ஆதரித்த அனைவருக்கும் நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இப்போதைக்கு எனக்கு கிடைத்த இது மிகப் பெரிய விஷயம். முதலில் நான் இதை அனுபவித்துக் கொள்கிறேன். பிறகு அடுத்த நாள் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -