இந்தியா ஜெயிக்க முடியாத டீம் கிடையாது.. எங்க இங்கிலாந்து 2 பேரை டார்கெட் பண்ணினா சும்மா ஜெயிக்கலாம் – ஆதர்டன் சவால்

0
9
Ict

2026 டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை மறுநாள் இந்தியா-இங்கிலாந்து அணிகள் செமி பைனலில் நேருக்கு நேர் மோத இருக்கின்றன. இந்த போட்டி குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் ஆதர்டன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்த உலகக் கோப்பை தொடரை எடுத்துக் கொள்ளும் பொழுது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இரண்டுமே சமபலம் வாய்ந்த அணிகளாகவே இருக்கின்றன. இரண்டு அணிகளின் பேட்டிங் யூனிட்டும் இன்னும் சரியான முறையில் கிளிக் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இங்கிலாந்து-இந்தியா பிரச்சனை

தற்போது இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பில் சால்ட் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் மிகவும் தடுமாற்றமாக இருந்து வருகிறார்கள். மூன்றாவது இடத்தில் வரும் ஹாரி ப்ரூக் மற்றும் பினிஷர் ஆக வரும் வில் ஜாக்ஸ் இருவர் மட்டுமே இங்கிலாந்து அணிக்கு முக்கியமான வீரர்களாக இருக்கிறார்கள்.

இந்திய அணிகளும் பேட்டிங்கில் பெரிய அளவில் யாரும் சீராக ரன்கள் குவிக்கவில்லை. யாராவது ஒரு வீரர் ரன்கள் எடுக்க இந்திய அணி வெற்றி பெற்று வருகிறது. இந்திய அணி தனது அச்சுறுத்தும் பேட்டிங்கை இன்னும் வெளிப்படுத்தவில்லை. பந்துவீச்சிலும் பெரிய அளவில் இரண்டு அணிகளும் எதிரணிகளை அச்சுறுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வெல்ல முடியாத அணி இல்லை

இதுகுறித்து மைக்கேல் ஆதர்டன் பேசும் பொழுது “நான் இந்த இந்திய அணியை பார்த்து வந்ததில் இவர்களுடைய பீல்டிங் என்பது மிகவும் சுமாராக இருக்கிறது. அதே சமயத்தில் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் வலிமையானது. ஆனால் இதனால் இந்திய அணி வெல்ல முடியாத அணி என்பது கிடையாது. அவர்களை நம்மால் வெற்றி பெற முடியும். மேலும் இந்திய அணியின் பேட்டி இன்னும் இந்த தொடரில் முழுதாக கிளிக் ஆகவில்லை என்பதை ஞாபகத்தில் வைக்க வேண்டும்”

” இந்திய அணியின் பவுலிங் யூனிட்டை பார்த்தால் பலமானதாக தெரியும். ஆனால் அதில் ஒருவர் அடி வாங்கினால் அவருக்கு பதிலாக இன்னொருவர் வந்து பந்து வீசுவதற்கு யாரும் இல்லை. இதனால் இங்கிலாந்து இந்தியாவின் இரண்டு பவுலர்களை குறி வைத்து தாக்கினால் அவர்கள் எளிதாக சிக்கிக் கொள்வார்கள். இந்த போட்டியில் இந்திய அணியை வெல்ல வேண்டும் என்றால் இங்கிலாந்து தனது முழு பலத்தை வெளிப்படுத்தினால் சுலபமாக வென்று விடலாம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -