விராட் ரோஹித்தை பார்த்து இதை கற்றுக் கொண்டேன்.. இந்த நாளுக்காக காத்திருந்தேன் – சஞ்சு சாம்சன் உருக்கமான பேச்சு

0
14
Sanju

இன்று டி20 உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று செமி பைனலுக்கு தகுதி பெற்றது.

இந்த போட்டியில் துவக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சங் இறுதிவரை களத்தில் நின்று 50 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார். மேலும் அவர் ஆட்டநாயகன் விருதை வென்று, தனது சிறப்பான பேட்டிங் குறித்த காரணங்களை பேசியிருக்கிறார்.

- Advertisement -

இவர்கள்தான் காரணம்

சஞ்சு சாம்சன் பேசும்போது “இது எனக்கு மிகுந்த அர்த்தத்தை கொடுக்கிறது. நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த காலத்தில் இருந்து இப்படி ஒரு நாளுக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தேன். இன்று எனக்கு அப்படி ஒரு நாள் அமைந்திருக்கிறது. இதற்காக நான் மிகுந்த நன்றி உள்ளவனாக இருக்கிறேன். என் பயணம் எப்பொழுதும் சிறப்பானதுதான் நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருந்திருக்கிறது. என்னால் சாதிக்க முடியுமா முடியாதா? என்று நினைத்திருக்கிறேன். ஆனால் இறுதியில் என்னை ஆசிர்வதித்த இறைவனுக்கு நன்றி”

“நான் இந்த படிவத்தில் நீண்ட காலமாக விளையாடுகிறேன். ஐபிஎல் தொடரில் 10 வருடம் தாண்டி விளையாடி வருகிறேன். இதேபோல நான் இந்திய அணிலும் 10 வருடம் தாண்டி இருந்தாலும் எல்லா போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் நான் டக் அவுட்டில் இருந்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்றவர்கள் விளையாடுவதை பார்த்து கற்றுக் கொண்டிருக்கிறேன்”

- Advertisement -

இதைத்தான் முடிவு செய்தேன்

“அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள்? சூழ்நிலைக்கு ஏற்ப எப்படி விளையாட்டை மாற்றிக் கொள்கிறார்கள் என்பதை வெளியில் இருந்து பார்த்து கற்றுக் கொண்டது உதவி இருக்கிறது. நான் 50 போட்டிகள் விளையாடி இருக்கலாம். ஆனால் நூறு போட்டிகள் வெளியில் அமர்ந்து பார்த்து கற்றுக் கொண்டிருக்கிறேன்”

இதையும் படிங்க: வெ.இ போட்டி.. இந்தியாவுக்கு அடுத்த அதிரடி லக்.. சூரியகுமார் வெளியிட்ட தகவல் – இந்திய அணி சாதிக்குமா?

“நான் முதலில் அதிரடியாகவே தொடங்கினேன். அதை அதிகப்படுத்த நினைத்த பொழுது விக்கெட் விழுந்தது. அதனால் நான் பொறுமையாக விளையாடி பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி விளையாடினேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -