எங்க பாகிஸ்தான விடுங்க.. ஆனால் இந்தியா செமி பைனல் போகவே போகாது – முகமது அமீர் மீண்டும் கருத்து

0
3
Amir

பாகிஸ்தான அணியின் முன்னாள் வீரர் முகமது அமீர் மீண்டும் இந்திய அணி செமி-பைனலுக்கு செல்லாது எனக் கூறி சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறார்.

இந்திய அணி நாளை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரண்டாவது சுற்று கடைசி போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி செமி பைனலுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

முகமது அமீர் முன் கருத்து

இந்த உலகக் கோப்பைத் தொடர் தொடங்கியதும் பாகிஸ்தானில் இருந்து முகமது அமீரின் கருத்துகள் இந்தியா முழுக்க பரவும் அளவுக்கு அதிரடியாக இருந்து வந்திருக்கிறது. முதலில் அபிஷேக் ஷர்மா வெறுமனே பந்தை காற்றில் சுற்றக்கூடியவர். அவரால் ரன் எடுக்க முடியாது என்று கூறி முகமது அமீர் ஆரம்பித்து வைத்தார்.

மேலும் முதல் சுற்று நடந்து கொண்டிருக்கும் பொழுதே இந்திய அணி நிச்சயம் செமி பைனலுக்கு முன்னேறாது என்று கூறி ஆச்சரியப்படுத்தினார். இதைத் தொடர்ந்து இந்திய வட்டாரங்களில் இருந்து அவர் மீது பதில் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் சொன்னது போலவே இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியிடம் தோல்வி அடைந்ததும், அவர் இன்னும் தன் கருத்தை உறுதியாக கூற ஆரம்பித்தார்.

- Advertisement -

மீண்டும் சொல்கிறேன்…

இந்த நிலையில் முகமது அமீர் மீண்டும் இது குறித்து ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேசும் பொழுது “பாகிஸ்தான் செமி பைனல் போகும் போகாது அதை விடுங்கள். ஆனால் நிச்சயம் இந்தியா செமி பைனல் போகாது” என்று கூறி மறுபடியும் மீடியாக்களுக்கு தீனி போட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க : வெ.இ மேட்ச்.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. முக்கிய அந்த மாற்றம் நடக்குமா.. செமி பைனல் போகுமா?

அதே சமயத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தங்கள் அணி தனி திட்டங்கள் உடன் களம் இறங்கும் என்று சூரியகுமார் யாதவ் கூறியிருக்கிறார். இதற்காக கொல்கத்தாவில் அமர்ந்து தங்கள் திட்டங்களை தீட்டி சிறப்பான முறையில் கொண்டு வந்து செயல்படுத்துவோம் என்று அவர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -