திலக் வர்மாவுக்கு கிரீஸில் இருக்க தகுதியே கிடையாது.. அவர் செஞ்ச இந்த ஒரு தப்பு போதும் – ஸ்ரீகாந்த் விமர்சனம்

0
11
Srikanth

தற்போது இந்திய டி20 அணியில் மூன்றாவது இடத்தில் விளையாடி வரும் திலக் வர்மாவை நீக்க வேண்டும் என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அதிரடியாக கூறியிருக்கிறார்.

இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் மூன்றாவது இடத்தில் விளையாடி வரும் திலக் வர்மா ஸ்ட்ரைக் ரேட் மிகவும் குறைவாக உள்ளது. இத்துடன் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் மிக மோசமான ஷாட் விளையாடி ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

ஏன் நீக்க வேண்டும்?

தற்போது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் இடதுகை வீரர்களாக இருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு எதிராக ஒரு பகுதி நேர ஆப்ஸ்பின்னர் ஆட்டத்தின் முதல் ஓவரை வீச வருகிறார். மேலும் அதே ஓவரில் ஒரு விக்கெட் விழுகிறது. இந்திய அணிக்கு முதல் ஓவரில் விக்கெட் போவதால் பெரிய தலைவலியாக மாறுகிறது.

இதன் காரணமாக துவக்க இடத்தில் சஞ்சு சாம்சன் கொண்டு வரப்பட வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. அவர் வலதுகை வீரர் என்பதால் பகுதிநேர ஆப் ஸ்பின்னரை எதிரணிகள் முதல் ஓவரை வீச வைக்காது. மேலும் மூன்றாவது இடத்தில் இஷான் கிஷான் இருப்பதின் மூலம் இந்திய அணிக்கு கூடுதல் பலம் கிடைக்கும்.

- Advertisement -

இந்த தகுதி இல்லை

இதுகுறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்பொழுது “சஞ்சு சாம்சன் அனுக்குள் வந்தால் நிச்சயமாக திலக் வர்மாவுக்கு இடம் இருக்காது. பலரும் அவருடைய இடத்தைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால் அவற்றின் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாடிய அந்த ஒரு ஷாட்டுக்கு, அவர் கிரீசில் இருப்பதற்கான தகுதியே கிடையாது. அவர் நீக்கப்பட வேண்டியவர்”

இதையும் படிங்க : வெஸ்ட் இண்டீஸ் போட்டியில்.. அவர் ஒரு ஓவரில் 4 சிக்ஸர் கூட வாரி வழங்குவார்.. அவர் ஆல் ரவுண்டரே இல்லை – முகமது கைப் தாக்கு

” மேலும் இந்திய அணி பெரிய ரன்னை சேஸ் செய்வதற்கு மிகவும் தடுமாறும். நாம் இந்த இடத்தில் விராட் கோலி போன்ற ஒரு மாஸ்டரை இழந்திருக்கிறோம். அதன் ஓட்டை வெளிப்படையாக தெரிகிறது. எனவே இனி அணிகள் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து இந்திய அணியை ஷேஸ் செய்ய வைக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -