இந்தியாவுடன் தோல்வி.. இதை இப்படியே விட்டு விடுங்கள்.. 20 வருஷமா இது பழகிடுச்சு – வக்கார் யூனுஸ் வருத்தம்

0
17
Younis

நேற்று டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிராக கிடைத்த தோல்வியை அப்படியே விட்டுவிட வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் வக்கார் யூனுஸ் மிகவும் வருத்தத்துடன் பேசியிருக்கிறார்.

இந்த போட்டியில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான பெரிய மைதானத்தில் நடைபெறுகின்ற காரணத்தாலும், பாகிஸ்தான் அணியில் ஆறு சுழல் பந்துவீச்சாளர்கள் இருக்கின்ற காரணத்தினாலும், இந்திய அணிக்கு பாகிஸ்தான் கடுமையான அழுத்தத்தை உண்டாக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது பொய்யாக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

தொடர் தோல்விகள்

நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் நெதர்லாந்து மிகப் பெரிய நெருக்கடியை கொடுத்து இறுதியில் போராடி தோற்றது. இதற்கு அடுத்து இந்திய அணிக்கு எதிராக அமெரிக்க அணி சிறப்பான போராட்டத்தை வெளிப்படுத்தியது.

இதைவிட இங்கிலாந்து அணிக்கு எதிராக நேபாள் அணி விளையாடிய விதம் உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்தது. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆப்கானிஸ்தான் அணியின் போட்டி இதுவரையிலான டி20 போட்டிகளில் மிகச் சிறந்த போட்டியாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியா பாகிஸ்தான் போட்டியில் அப்படி எதுவுமே இல்லை. இந்திய அணி ஒரு தலைப்பட்சமாக வென்று இருக்கிறது.

- Advertisement -

அப்படியே விட்டு விடுங்கள்

இந்த நிலையில் கடந்த 20 வருடங்களுக்கும் பக்கமாக பாகிஸ்தான அணி தொடர்ந்து ஐசிசி உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணி இடம் தோற்று வருவது வழக்கமாகிவிட்டதால், இந்த தோல்வியை பெரிது படுத்தாமல் அப்படியே விட்டுவிட வேண்டும் என வக்கார் யூனுஸ் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : பாகிஸ்தான் டி20 அணியில் பாபர் உட்பட இந்த மூன்று பேருக்கு நேரம் முடிந்து விட்டது.. உடனே மாற்றுங்க – முகமது யூசுப் அறிவுறுத்தல்

இதுகுறித்து வக்கார் யூனுஸ் பேசும்பொழுது “இந்த மோதலில் இந்தியாவின் ஆதிக்கம் பாகிஸ்தானுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கும். ஐசிசி தொடர்களில் இந்திய அணிக்கு இது தொடர்ச்சியாக 11 வது வெற்றியாக அமைந்திருக்கிறது. சரி போதும் இதை இப்படியே விட்டு விடுங்கள். இதையெல்லாம் நிறைய பேசிவிட்டோம். இந்தியா கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது என்று நான் சொல்வேன்) எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -