ஹர்பஜன் உங்களுக்கு மரியாதை இல்லாம பண்ணிடுவேன்.. மாத்தி மாத்தி பேசாதீங்க – பாக் தன்வீர் அகமத் விமர்சனம்

0
4
Harbhajan

தற்போது இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பேச்சு குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமத் யூட்யூப் சேனலில் கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.

பாகிஸ்தான் சுழல் பந்துவீச்சாளர் உஸ்மான் தாரிக்கை நான் புறக்கணிக்கிறேன் என ஹர்பஜன் சிங் கிரிக்கெட் வர்ணனையில் பேசியிருந்தார். மேலும் பாகிஸ்தானில் இருந்து வரும் கருத்துகள் குறித்து அவர் கோபமாக விமர்சனம் செய்திருந்தார்.

- Advertisement -

உங்களுக்கு இரட்டை முகம்

இதுகுறித்து தன்வீர் அகமத் பேசும்பொழுது “நீங்கள் கிரிக்கெட் கமெண்ட்ரி செய்கிறேன் என்று சொல்கிறீர்கள். ஆனால் அங்கு பேசும் பொழுது உஸ்மான் தாரிக்கை புறக்கணிக்கிறேன் என்று சொல்கிறீர்கள். பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்க கூடாது என்று சொல்கிறீர்கள். ஆனால் பாகிஸ்தான் வீரர்களுடன் உட்கார்ந்து கிரிக்கெட் வர்ணனை செய்கிறீர்கள். நீங்கள் இரட்டை முகம் கொண்டவர்”

“நீங்கள் உண்மையில் நேர்மையான மனிதர் என்றால் பாகிஸ்தான் வீரர்களுடன் உட்கார்ந்து கிரிக்கெட் வர்ணனை செய்ய மாட்டேன் கைகுலுக்க மாட்டேன் என்று சொல்லி செய்திருக்க வேண்டும். நீங்கள் அப்படி எதுவும் செய்யவில்லை. அதனால் நீங்கள் இப்படிப்பட்ட விமர்சனங்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்”

- Advertisement -

யாருக்கு மரியாதை இல்லை?

“எனக்கு மரியாதை தெரியவில்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். முதலில் நீங்கள் உங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்னை விட அதிக கிரிக்கெட் விளையாடியவர். நீங்கள் என் குறித்து வீடியோவில் பேசிய எந்த வார்த்தைகளையும் நான் இங்கு பயன்படுத்தவில்லை. இப்போது யாருக்கு மரியாதை இல்லை?”

இதையும் படிங்க : IND vs PAK.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. கம்பீரின் பிரில்லியன்ட் 2 மாற்றங்கள்.. பாகிஸ்தானுக்கு நெருக்கடி

“உங்கள் வீடியோவில் நீங்கள் என்னை பற்றி கடைசியில் பேசிய விஷயம் மோசமாக இருந்த போதும் நான் இப்பொழுது என் பேச்சில் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் காட்டுகிறேன். ஆனால் நீங்கள் மீண்டும் இப்படியே செய்தால் நான் அமைதியாக இருக்க மாட்டேன். நான் யார் என்று காட்டுவேன். இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -