பாகிஸ்தான் போட்டிக்கு தயார்.. நாங்க அந்த எல்லா விஷயத்தையும் பாத்துட்டு தான் இருக்கோம் – திலக் வர்மா பேட்டி

0
7
Tilak

இந்திய அணியின் நட்சத்திர வீரர் திலக் வர்மா நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு ஒட்டுமொத்த இந்திய அணியும் தயாராக இருப்பதாக கூறி இருக்கிறார்.

இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி இலங்கை கொழும்பு மைதானத்தில் நடைபெற உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பாக இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக விளையாட பாகிஸ்தான் அரசாங்கம் சம்மதம் தெரிவித்திருந்தது.

- Advertisement -

சிறிய அணிகளின் அச்சுறுத்தல்

டி20 உலகக் கோப்பை தொடங்கிய முதல் நாளிலேயே நேபாள் அணி மிகப்பெரிய அச்சுறுத்தலை இங்கிலாந்து அணிக்கு கொடுத்திருந்தது. நெதர்லாந்து, அயர்லாந்து போன்ற அணிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளிடம் போராடியே விழுந்தன. அவர்களின் போராட்டம் வெற்றி பெற்றிருந்தால் இந்த டி20 உலக கோப்பை தொடரின் விஷயங்கள் முழுவதுமாக மாறி இருக்கும்.

இதே போல இந்திய அணிக்கு அமெரிக்க அணி பெரிய சவால் கொடுத்தது. மேலும் நேற்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு சூப்பர் ஓவர்களுக்கு ஆப்கானிஸ்தான் அழைப்பு சென்றது. இந்த நிலையில் எல்லா பெரிய அணிகளும் சிறிய அணிகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு வந்திருக்கின்றன. இன்று இந்திய அணி நமிபியா அணிக்கு எதிராக விளையாடுகிறது.

- Advertisement -

நாங்கள் தயார்

இதுகுறித்து இந்திய அணியின் வீரர் திலக் வர்மா பேசும் பொழுது “உண்மையைச் சொல்வது என்றால் நாங்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுவதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். நேற்று முன்தினம் எங்களுக்கு இடையே போட்டி நடைபெறப் போவதாக அறிந்தோம். ஆனாலும் இதற்காக நாங்கள் எல்லோரும் முன்கூட்டியே தயாராகத்தான் இருந்து வருகிறோம்”

இதையும் படிங்க : கிரிக்கெட்டில் என் கனவு லட்சியம் எல்லாமே இதுதான்.. அதை அடையாமல் ஓய்வு பெற மாட்டேன் – ரோஹித் சர்மா உருக்கம்

“மிக முக்கியமாக அனைத்து அணிகளையும் அதில் உள்ள பேட்டர்கள் மற்றும் பவுலர்கள் என எல்லோரையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் அணியில் உள்ள எல்லா வீரர்களும் இப்பொழுது தயாராக இருக்கிறார்கள். நாங்கள் இப்பொழுது மேட்ச் ஜோனில் இருக்கிறோம். திட்டமிடல் நடந்து கொண்டிருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -