நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டி ஒருதலைப்பட்சமாக இருக்காது என பாகிஸ்தான் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் பர்கான் கூறியிருக்கிறார்.
இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி இலங்கை கொழும்பு மைதானத்தில் வருகின்ற பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற இருக்கிறது. பல சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த போட்டி நடைபெறுகின்ற காரணத்தினால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒரு தலைப்பட்சமாக இருக்காது
கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் இந்திய அணிகள் மூன்று முறை மோதி இருந்தன. இந்த மூன்று முறையும் இந்திய அணி வெற்றி பெற்றதோடு ஆசியக் கோப்பை தொடரையும் கைப்பற்றியது. இதில் இறுதிப் போட்டியை தவிர மற்ற இரண்டு போட்டியிலும் பாகிஸ்தான் அணி ஒரு தலைப்பட்சமாக இந்திய அணியிடம் தோல்வி அடைந்திருந்தது.
இதுகுறித்து ஃபர்கான் பேசும்பொழுது “கடந்த ஆசிய கோப்பை தொடரில் நாங்கள் விளையாடிய விதத்தை பார்க்கும் பொழுது நாங்கள் ஒருதலைப்பட்சமாக தோல்வி அடையவில்லை என்று நினைக்கிறேன். நாங்கள் அதில் எல்லா போட்டிகளிலும் கடைசி வரை போராடிதான் தோல்வி அடைந்தோம். இந்த முறை நாங்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று நம்புகிறேன்”
எங்கள் அணுகுமுறை இதுதான்
“நீங்கள் ரன்கள் எடுத்துக் கொண்டிருந்தால் நம்பிக்கையுடன் இருப்பீர்கள். நான் நம்பிக்கை உடன் இருக்கிறேன். இந்திய அணிக்கு எதிரான போட்டி ஒரு சாதாரண போட்டி. அதை நாங்கள் அனைவருமே அப்படித்தான் எடுத்துக் கொள்வோம். இது இந்தியா பாகிஸ்தான் போட்டி என்று நாங்கள் எடுத்துக் கொள்ள மாட்டோம். சாதாரண போட்டியாகவே விளையாடுவோம்”
இதையும் படிங்க : என் பவுலிங்கை பார்த்து இந்தியா பயப்படுது.. நாங்க தான் அவங்க கிட்ட நிறைய சாதனை பண்ணி இருக்கோம் – உஸ்மான் தாரிக் பேச்சு
“மேலும் நாங்கள் இந்திய அணிக்கு எதிராக அதிரடியான தாக்குதல் பாணி முறையில்தான் விளையாட போகிறோம். மேலும் நான் ஆரம்பத்தில் அதிரடியாக ரன் குவிப்பது மட்டும் இல்லாமல் போட்டியை எடுத்துச் சென்று முடிக்கவும் விரும்புகிறேன். இந்த உலகக் கோப்பை தொடரில் குறைந்தது மூன்று ஆட்டநாயகன் விருதாவது வாங்க வேண்டும் என்று இலக்கு வைத்திருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.






