தற்போது பாகிஸ்தான் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிராக ஏன் விளையாடுவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது? என்பது குறித்து இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன்சிங் பேசியிருக்கிறார்.
இன்று பாகிஸ்தான் அரசாங்கம் இந்திய அணிக்கு எதிராக டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதாக அறிவித்தது. கடந்த வாரத்தில் விளையாட முடியாது என்று சொன்னபோது பல முன்னாள் வீரர்கள் இந்தியா பாகிஸ்தான் போட்டி கட்டாயம் நடக்கும் என்று கூறி வந்தார்கள். அதில் ஹர்பஜன் சிங்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானுக்கு ஏற்படும் இழப்பு
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒருவேளை தனது முடிவில் உறுதியாக இருந்திருந்தால் பொருளாதார இழப்பீட்டுக்காக வழக்கை சந்திக்க வேண்டி வந்திருக்கும். இதைத்தொடர்ந்து பெரிய அணிகள் யாரும் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்திருப்பார்கள். மேலும் பிஎஸ்என்எல் தொடருக்கும் வெளிநாட்டு வீரர்கள் வந்திருக்க மாட்டார்கள். இது பாகிஸ்தானின் ஒட்டுமொத்த கிரிக்கெட்டையே புரட்டி போட்டு விடும்.
இதுவெல்லாம் பாகிஸ்தானுக்கு நன்றாகவே தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணத்தால்தான் இந்திய முன்னாள் வீரர்களும் நிச்சயம் இந்தியா பாகிஸ்தான் போட்டி நடக்கும் என்று தொடர்ந்து சொல்லி வந்தார்கள். இறுதியில் அவர்கள் சொன்னபடியே நடந்திருக்கிறது.
பாகிஸ்தான் கெஞ்சும்
இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசும்பொழுது “பாகிஸ்தான் இல்லாமல் இந்த தொடர் நடக்கும். ஆனால் இந்தியா இல்லாமல் நடக்காது என்பதை அவர்கள் கொஞ்சம் தாமதமாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நாங்கள் பங்களாதேஷ்க்கு ஆதரவாக இருக்கிறோம் என பல கதைகளை சொல்லிக் கொண்டிருந்தார்கள். அது அவர்களுடைய விருப்பம். ஆனால் அவர்கள் நிச்சயம் மனதை மாற்றிக் கொண்டு வருவார்கள் என்று தெரியும். ஏனென்றால் அவர்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளுக்காக விளையாட கெஞ்சுவார்கள்”
இதையும் படிங்க: இந்திய முன்னாள் வீரர்களும் அரசியல் செய்கிறார்கள்.. புத்தி இல்லாமல் பேசுகிறார்கள் – சக்லைன் முஸ்டாக் குற்றச்சாட்டு
“அவர்கள் முடிவில் உறுதியாக இருந்திருந்தால் அவர்கள் நாட்டிற்கு யாரும் கிரிக்கெட் விளையாட சென்றிருக்க மாட்டார்கள். ஐசிசி தடை விதிப்பதோடு அபராதத்தையும் விதித்திருக்கும். அவர்களுக்கு பொருளாதார ரீதியாக பல இழப்புகள் ஏற்பட்டிருக்கும். எனவேதான் அவர்கள் திரும்பி வந்து விட்டார்கள்” என்று கூறி இருக்கிறார்.






