182 ரன்.. சேப்பாக்கத்தில் நியூசிலாந்து வரலாற்று வெற்றி.. ஆப்கானை இரண்டு வருடம் கழித்து ரெவென்ச் எடுத்தது – 2026 டி20 உலகக் கோப்பை

0
281
Rashid

இன்று டி20 உலகக் கோப்பை தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மேலும் கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்தை வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் ரன் குவிப்பு

முதலில் பேட்டிங் செய்ய வந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் இப்ராஹிம் ஜட்ரன் 12 பந்துகளில் 10 ரன்கள், ரஹமனுல்லா குர்பாஸ் 22 பந்தில் 27 ரன்கள் எடுத்தார்கள். இந்த நிலையில் மூன்றாவது இடத்தில் வந்த குல்பதின் அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் மூன்று பவுண்டர்கள் நான்கு சிக்ஸர்கள் உடன் 65 ரன்கள் எடுத்தார்.

இதைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் வந்த செதியுல்லா அடால் 24 பந்தில் 29 ரன், தர்வீஸ் ரசோலி 13 பந்தில் 20 ரன் எடுத்தார்கள். ஆப்கானிஸ்தான அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து பந்துவீச்சில் பெர்குஸன் 2 விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

நியூசிலாந்து வரலாற்று வெற்றி

இதைத்தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் டிம் சைய்பர்ட் 42 பந்தில் 65 ரன்கள், கிளன் பிலிப்ஸ் 25 பந்தில் 42 ரன்கள், சாப்மேன் 17 பந்தில் 28 ரன்கள், டேரில் மிட்சல் 14 பந்தில் 25 ரன்கள், சான்ட்னர் 8 பந்தில் 17* ரன் எடுத்தார்கள். நியூசிலாந்து அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி 19வது ஓவரில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : தம்பிகளா அமெரிக்காவா இருக்க தப்பிச்சீங்க.. உங்களுக்கு அந்த டீம்கள் காத்துக்கிட்டு இருக்கு – சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை

நியூசிலாந்து அணி இதுவரையில் டி20 உலக கோப்பை தொடரில் அதிகபட்சமாக 167 ரன்கள் சேஸ் செய்திருக்கிறது. இந்த முறை இதைத் தாண்டி வரலாற்று வெற்றியை பதிவு செய்திருக்கிறது. அதே சமயத்தில் 180 ரன்கள் தாண்டி எடுத்து ஒரு முறை கூட ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்ததில்லை. ஆனால் இந்த முறை அந்த பெருமையை ஆப்கானிஸ்தான் அணி இழந்து இருக்கிறது.

- Advertisement -