U19 உகோ பைனல்.. சூரியவன்சியின் சூறாவளி பேட்டிங்கில் இந்திய அணி சாம்பியன்.. 6வது முறையாக அசத்தல்

0
7
Vaibhav

இன்று 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி சாம்பியன் ஆனது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருந்ததை இந்திய அணியின் வீரர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

- Advertisement -

சூரியவன்சி சூறாவளி ஆட்டம்

இதைத்தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூரியவன்சி தனது அதிரடியில் மிரட்டலை கொடுத்தார். வெறும் 55 பந்தில் சதம் அடித்த அவர் மொத்தம் 80 பந்துகளை சந்தித்து 15 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்கள் உடன் 175 ரன்கள் குவித்தார்.

இதைத்தொடர்ந்து பேட்டிங் வரிசையில் மூன்றாவதாக வந்த கேப்டன் ஆயுஸ் மாத்ரே 51 பந்துகளில் 53 ரன்கள் மற்றும் அபிக்கியான் குண்டு 31 பந்தில் 40 ரன்கள் எடுத்தார்கள். இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இந்திய அணி சாம்பியன்

இதைத்தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணிக்கு பென் டவுக்கின்ஸ் 56 பந்தில் 66 ரன்கள், பென் மேயஸ் 28 பந்தில் 45 ரன்கள், பால்கணர் 65 பந்தில் 100 ரன்கள் எடுத்தார்கள். இறுதியில் இங்கிலாந்து அணி 311 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் பந்துவீச்சில் அம்பரீஷ் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

இதையும் படிங்க : இஷானை இந்த இடத்திற்கு கீழே அனுப்ப மாட்டோம்.. நாங்க ரெண்டு விஷயத்தை முடிவு பண்ணிட்டோம் – சூரியகுமார் பேச்சு

இதைத்தொடர்ந்து இந்திய அணி ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அண்டர் 19 உலக கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. மேலும் இது இந்திய அணிக்கு ஆறாவது சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -