தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்பது குறித்து இன்னும் உறுதி செய்யாததை பற்றி இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்தியா இலங்கை நாடுகளில் பிப்ரவரி 11-ம் தேதி முதல் ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடர் ஆரம்பிக்க இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் தாங்கள் விளையாடுவது குறித்து இதுவரையில் பாகிஸ்தான் உறுதி செய்யவில்லை. இறுதி முடிவை திங்கட்கிழமை அறிவிப்பதாக கூறியிருக்கிறார்கள்.
என்ன பிரச்சனை?
பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் இந்தியாவில் தாங்கள் விளையாடுவதற்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி தங்கள் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற சொல்லி ஐசிசி இடம் கேட்டது. இதற்கு ஐசிசி முடியாது என மறுத்துவிட்டது. இந்த நிலையில் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் தங்கள் அணியை டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது.
தற்போது பங்களாதேஷ் டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறி விட்டதால், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தானும் வெளியேறலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தங்களுடைய பிரதமர் முடிவு செய்ய வேண்டும் என கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் கூறியிருந்தார்.
இது பெரிய முட்டாள்தனம்
அதே சமயத்தில் பாகிஸ்தான் இந்தியா வந்து விளையாட முடியாது என்று கூறியதால் இலங்கையில் அவர்களுக்கு போட்டி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மௌனம் காத்து வருவது குழப்பங்களை உருவாக்கி இருக்கிறது.
இதையும் படிங்க : சாம்சன் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.. அவர் கிரிக்கெட்டுக்கு நேற்று வரல – சாகல் அதிரடி கருத்து
இது குறித்து இர்பான் பதான் கூறும்பொழுது “முட்டாள்தனம்! முட்டாள்தனம்! இது பாகிஸ்தானிடம் இருந்து வந்திருக்கும் முட்டாள்தனம். நீங்கள் ஹைப்ரீட் மாடலை ஏற்றுக் கொண்டு, இலங்கையில் விளையாடுவதற்கு ஒப்புக்கொண்ட பிறகு ஏன் இப்படி தேவையில்லாத சூழ்நிலையை உருவாக்க வேண்டும்? இது முற்றிலும் முட்டாள் தனம் என்பதை தவிர வேறு இல்லை” என்று கூறியிருக்கிறார்.






