தென் ஆபிரிக்க அணி தங்களது சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அபார வெற்றி பெற்று தொடரை வென்று இருக்கிறது.
இரு நாடுகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று இருந்த நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது.
ஹெட்மயர் அதிரடி
இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் பிரண்டன் டெய்லர் 30 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் ஷாய் ஹோப் 7 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதைத்தொடர்ந்து மூன்றாவது இடத்தில் வந்த சிம்ரன் ஹெட்மயர் 42 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 75 ரன்கள் குவித்தார். இறுதியில் ரூதர்போர்டு 24 பந்துகளில் 5 பவுண்டர்கள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 54 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது.
தென் ஆப்பிரிக்கா அபாரம்
இதைத்தொடர்ந்து விளையாட வந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு துவக்க ஆட்டக்காரர் மூத்த வீரர் குயின்டன் டி காக் 49 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் உடன் சதம் அடித்து 115 ரன்கள் குவித்தார். இன்னொரு முனையில் ஆட்டம் இழக்காமல் ரிக்கல்டன் 36 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 77 ரன்கள் குவித்தார்.
இதையும் படிங்க : டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி ரோஹித் கலந்த கலவைதான் அவர்.. எல்லாத்தையும் மறக்க அவரோட ஒரு இன்னிங்ஸ் போதும் – முனாப் பட்டேல் புகழாரம்
இதைத் தொடர்ந்து பெரிய இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 17.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் முதல் போட்டியை வென்றிருந்ததால் இந்த தொடரையும் கைப்பற்றியது.






