தற்போது ஐசிசி வெளியிட்டு இருக்கும் டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் இளம் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா யாரும் தொட முடியாத உயரத்திற்கு சென்று இருக்கிறார்.
தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் மூன்று போட்டிகளில் இரண்டு பிரம்மாண்ட அதிரடி அரை சதங்களை அபிஷேக் ஷர்மா அடித்திருந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு கூடுதல் பிள்ளைகள் கிடைத்திருக்கிறது.
மிகப்பெரிய வித்தியாசம்
தற்போது ஐசிசி வெளியிட்டு இருக்கும் டி20 பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் அபிஷேக் ஷர்மா 929 புள்ளிகள் உடன் முதல் இடத்தில் இருக்கிறார். மேலும் இவரே இந்த வடிவத்தில் மிக அதிக புள்ளைகளை எடுத்த பேட்ஸ்மேன் ஆகவும் சாதனை படைத்திருக்கிறார்.
இவருக்கு அடுத்தபடியான இடத்தில் இங்கிலாந்தின் விக்கெட் கீப்பிங் தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் 849 புள்ளிகள் உடன் இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையில் மொத்தம் 80 புள்ளிகள் வித்தியாசம் இருக்கிறது. அந்த அளவிற்கு அபிஷேக் ஷர்மா சீராகவும் அதிரடியாகவும் ரன்கள் எடுத்து வருகிறார்.
இந்தியர்களின் ஆதிக்கம்
மேலும் இந்த பட்டியலில் நியூசிலாந்து டி20 தொடரில் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்திருப்பதால் இந்திய அணிக்கு திரும்பாத திலக் வர்மா 781 புள்ளிகள் உடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். கேப்டன் சூரியகுமார் யாதவ் ஐந்து இடங்கள் முன்னேறி 717 புள்ளிகள் உடன் ஏழாவது இடத்தில் இருக்கிறார்.
இதையும் படிங்க: டி20 உலக கோப்பையில் அலட்சியமா இருக்காதீங்க.. ஒரு மோசமான நாள் எல்லாத்தையும் முடிச்சுடும் – ராகுல் டிராவிட் எச்சரிக்கை
ஐசிசி தரவரிசை பட்டியல்:
அபிஷேக் ஷர்மா – 929
பில் சால்ட் – 849
திலகம் வர்மா – 781
ஜோஸ் பட்லர் – 770
சாஹிப்ஜாதா ஃபர்ஹான் – 763
பத்தும் நிசாங்கா – 758
சூர்யகுமார் யாதவ் – 717
டிராவிஸ் ஹெட் – 713
மிட்செல் மார்ஷ் – 684
டிம் செய்ப்பர்ட் – 669






