வெறும் 66 பந்து.. ஹாரி புரூக் அதிரடியில் இலங்கைக்கு சொந்த மண்ணில் சோகம்.. இங்கிலாந்து தொடரை கைப்பற்றியது

0
233
Brook

இன்று இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு தொடரையும் வென்று அசத்தியிருக்கிறது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மேலும் முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று இருந்தன. எனவே இந்த போட்டியை வெல்லும் பணி தொடரை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரூட் – புரூக் மிரட்டல்

இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ரேகான் அகமத் 37 பந்தில் 24 ரன்கள், பென் டக்கெட் 17 பந்தில் 7 ரன்கள் எடுத்தார்கள். இதற்கு அடுத்து இளம் வீரர் ஜேக்கப் பெத்தேல் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து 72 பந்தில் 65 ரன்கள் எடுத்தார்.

இதைத் தொடர்ந்து இறுதி வரை விளையாடிய ஜோ ரூட் சதம் அடித்து 108 பந்துகளில் 111 ரன்கள் எடுத்தார். இன்னொரு முனையில் 57 பந்தில் அதிரடியாக சதம் அடித்த கேப்டன் ஹாரி புரூக் 66 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் ஆட்டம் இழக்காமல் 136 ரன்கள் குவித்தார். இவரது அதிரடியால் இங்கிலாந்து மூன்று விக்கெட் இழப்புக்கு 50 ஓவரில் 357 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இலங்கை பணிந்தது

பெரிய இலக்கை நோக்கி விளையாட வந்த இலங்கை அணிக்கு நிஷாங்கா அதிரடியாக விளையாடி 25 பந்தில் 50 ரன்கள் எடுத்தார். குசால் மெண்டிஸ் தன் பங்குக்கு அதிரடியாக விளையாடி 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். இலங்கை மூன்று விக்கெட் இழப்புக்கு பவர் பிளேவில் நூறு ரன்கள் தாண்டி எடுத்து அசத்தியது.

இதையும் படிங்க : U19 உலகக் கோப்பை.. 13 ஓவரில் நியூசியை பந்தாடிய சூரியவன்சி ஆயுஸ் மாத்ரே.. இந்தியா பிரம்மாண்ட வெற்றி

இதை பயன்படுத்தி மற்ற இலங்கை பேட்ஸ்மேன்கள் யாரும் விளையாடவில்லை. இளம் வீரர் பவன் ரத்னாயகே மட்டும் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 115 பந்துகளில் 121 ரன்கள் எடுத்தார். இறுதியில் போராடி 304 ரன்கள் எடுத்து இலங்கை ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் வென்றது. இலங்கை சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை நீண்ட நாட்கள் கழித்து இழந்திருக்கிறது.

- Advertisement -