பங்களாதேஷ் ஒரு நாடு பத்து கிரிக்கெட் நாட்டுக்கு சமம்.. ஐசிசி பெரிய தப்பு பண்ணிடுச்சு – முகமது யூசுப் விமர்சனம்

0
6
Yusuf

டி20 உலக கோப்பை தொடரில் இருந்து பங்களாதேஷ் அணியை வெளியேற்றி ஐசிசி பெரிய தவறை செய்துவிட்டதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது யூசுப் கூறியிருக்கிறார்.

அடுத்த மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் துவங்க இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் இருந்து பங்களாதேஷ் வெளியேறி இருக்கிறது. அவர்களுடைய போட்டிகளை இந்தியாவிலிருந்து மாற்றும் படி வைத்த கோரிக்கையை ஐசிசி ஏற்கவில்லை. இதனால் பங்களாதேஷ் வெளியேற ஸ்காட்லாந்து உள்ளே வந்திருக்கிறது.

- Advertisement -

வருவாய் இழப்பு

தற்போது டி20 உலகக்கோப்பை தொடரில் பங்குபெறும் 10 நாடுகளின் மக்கள் தொகையை விட பங்களாதேஷ் மக்கள் தொகை அதிகமாக இருக்கிறது. இதனால் டி20 உலக கோப்பை பார்ப்பவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் குறையும். இதனால் ஐசிசிக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.

மேலும் பாகிஸ்தான் அணியும் டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பது குறித்து இன்னும் சந்தேகமே இருக்கிறது. அவர்கள் இது குறித்து திங்கள் கிழமை அறிவிப்பதாக இருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் பங்குபெறாவிட்டால் ஐசிசி பெரிய நஷ்டத்தை சந்திக்கும்.

- Advertisement -

இது நியாயம் கிடையாது

இதுகுறித்து முகமது யூசுப் பேசும்பொழுது ” நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து, நமீபியா, நேபாளம் நெதர்லாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வே இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் என பத்து நாடுகளில் இருக்கும் மக்கள் தொகையை விட பங்களாதேஷில் மக்கள் தொகை அதிகம். இந்த பத்து நாடுகள் இணைந்து 1.78 மில்லியன் பார்வையாளர்களை கொடுக்கிறது. ஆனால் இதை பங்களாதேஷ் தனியாகவே கொடுக்கும்”

இதையும் படிங்க : சூரிய குமாரை தப்பா கணக்கு போட்டுட்டீங்க.. அவருக்கு அந்த அதிர்ஷ்டம் கூட தேவையில்லை – கவாஸ்கர் பாராட்டு

” உலகளாவிய ரசிகர்களை மையமாகக் கொண்ட ஒரு விளையாட்டில் பங்களாதேஷின் நியாயமான கவலைகளை புறக்கணிப்பது நிர்வாகத்தின் நிலைத்தன்மை மற்றும் நியாயத்தை குறித்த கேள்வி எழுப்புகிறது. சலுகைகள் ஒரு சிலருக்கு மட்டும் தேர்ந்தெடுத்து வழங்கப்படும் பொழுது நியாயம் தானாகவே அழிந்து விடுகிறது. கிரிக்கெட் செல்வாக்கால் ஆளப்படக்கூடாது, கொள்கைகளால் நிர்வகிக்கப்பட வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -