அபிஷேக் ஷர்மா கடவுளின் குழந்தை.. நீ பணிவா இருக்காதப்பா.. யுவராஜ் சிங் ரெக்கார்டு காலியாகும் – அஸ்வின் கருத்து

0
8
Ashwin

இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் யுவராஜ் சிங்கின் சாதனையை ஒருவர் முறியடிப்பார் என்றால் அது அபிஷேக் ஷர்மாவாகவே இருக்கும் என்று உறுதியாக கூறியிருக்கிறார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 14 பந்தில் அபிஷேக் ஷர்மா அரை சதம் அடித்தார். யுவராஜ் சிங் 12 பந்தில் அடித்து முதல் இடத்தில் இருக்கிறார். மேலும் இந்த சாதனையை முறியடிப்பது கடினம் என்றும் அபிஷேக் ஷர்மா கூறியிருந்தார். தற்போது இதற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் பதில் அளித்திருக்கிறார்.

- Advertisement -

கடவுளின் குழந்தை

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” பவர் பிளேவில் நம்ப முடியாத அளவுக்கு அதிரடியாக அபிஷேக் ஷர்மா பேட்டிங் செய்கிறார். அவர் கடந்த போட்டியில் 14 பந்தில் அரை சதம் அடித்திருந்தார். மேலும் அவர் பெரிய சிக்ஸர்களை விக்கெட் விழுந்தாலும் அடிக்கிறார். கடைசி போட்டிகள் அவர் ஒரு சிக்ஸர் அடித்து விட்டு தனது பேட்டின் அடிப்பகுதியை பார்த்துக் கொண்டிருந்தார்”

“பந்து பேட்டின் அடிப்பகுதியில் பட்டது போல் தெரிந்தது ஆனாலுமே அது சிக்ஸருக்கு சென்றது. அவருடைய பேட் ஸ்விங் மற்றும் அவர் பேட்டிங் செய்யும் விதம் அற்புதமாக இருக்கிறது. அவர் கடவுளின் குழந்தை. அவர் பேட்டிக் செய்யும் விதம் நம்ப முடியாத அளவுக்கு இருக்கிறது”

- Advertisement -

இவ்வளவு பணிவு வேண்டாம்

“அபிஷேக் ஷர்மா மூன்றாவது போட்டி முடிவுக்கு பின் யுவராஜ் சிங் 12 பந்தில் அரை சதம் அடித்த சாதனையை முறியடிப்பது கடினம் என்று கூறியிருந்தார். தயவுசெய்து நீங்கள் அவ்வளவு பணிவாக இருக்காதீர்கள். நீங்கள் பணிவாக இருப்பதை இந்தியாவில் இருக்கும் மக்கள் விரும்புகிறார்கள். ஆனாலும் இவ்வளவு வேண்டாம்”

இதையும் படிங்க : 4வது டி20.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. திலக் வர்மா இடத்தை என்ன செய்வார் கம்பீர்.. மாற்றம் நடக்குமா?.. முழு அலசல்

“நான் யுவராஜ் பாஜியில் சாதனையை உங்களால் கட்டாயம் முறியடிக்க முடியும். அதை முறியடிக்க ஒருவரால் முடியும் என்றால் அது நீங்கள் மட்டும்தான். எதிர்காலத்தில் நீங்கள் அதை செய்யப் போகிறீர்கள். எனவே இந்தப் பணிவு வேண்டாம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -