அடுத்த மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த அணியில் ஒரு நட்சத்திர வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு அதே சமயத்தில் இரண்டு நட்சத்திர வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த தேர்வு பெரிய ஆச்சரியத்தை உண்டாக்கி இருக்கிறது.
நட்சத்திர வீரர் சேர்ப்பு
டி20 உலகக் கோப்பை பாகிஸ்தான் அணியில் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் மீண்டும் சேர்க்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை உருவாக்கியிருக்கிறது. காரணம் அவர் ஆஸ்திரேலியா டி20 லீக்கில் மிகவும் சுமாரான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி எல்லோரையும் வெறுப்பேற்றி இருந்தார். இந்த நிலையில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதே நேரத்தில் சல்மான் அலி ஆகா கேப்டனாக தொடர்கிறார். மூத்த வீரர்கள் பகார் ஜமான், ஷதாப் கான் மற்றும் ஷாகின் அப்ரிடி இருவரும் இடம் பெற்று இருக்கிறார்கள். மேலும் இளம் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் நசிம் ஷாக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த முறை இளம் வீரர்கள் கொண்ட அணி களம் இறக்கப்படுகிறது.
இரண்டு முக்கிய வீரர்கள் நீக்கம்
மேலும் பாபர் அசாம் இடம் பெற்று இருக்கும் நிலையில் இன்னொரு நட்சத்திர வீரரான விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். மேலும் பாகிஸ்தான் அணியின் அதிவேக பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுப் நீக்கப்பட்டிருக்கிறார். இந்த இரண்டு நீக்கங்களும் பெரிய அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க : சஞ்சு சாம்சனுக்கு அநியாயம் பண்ணிடாதீங்க.. அது எப்படி தப்பா இருக்க முடியும்? – அஸ்வின் ஆதரவு
பாகிஸ்தான் அணி:
சல்மான் அலி ஆகா
அப்ரார் அகமது
பாபர் அசாம்
ஃபஹீம் அஷ்ரப்
ஃபகார் ஜமான்
கவாஜா முகமது நஃபாய்
முகமது நவாஸ்
சல்மான் மிர்சா
நசீம் ஷா
சாஹிப்சாதா ஃபர்ஹான்
சைம் அயூப்
ஷஹீன் அப்ரிடி
ஷதாப் கான்
உஸ்மான் கான்
உஸ்மான் தாரிக்






