இஷான் செஞ்ச அத வேற யாரும் செஞ்சு பாக்கல.. ஆனாலும் அவர் மேல எனக்கு கோபம் – சூரியகுமார் யாதவ் பேட்டி

0
112
Surya

நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இஷான் கிஷான் விளையாடிய விதத்தில் வேறு யாரும் விளையாடி தான் பார்க்கவில்லை என இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறியிருக்கிறார்.

இந்த போட்டியில் கேப்டன் சூர்யா குமார் யாதவை ஒரு முனையில் வைத்துக்கொண்டு இஷான் கிஷான் பவர் பிளேவில் அதிரடியில் மிரட்டினார். பவர் பிளே முழுவதையும் எடுத்துக்கொண்டு அதிரடியாக விளையாடி 75 ரன்கள் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தார். அந்த நேரத்தில் இந்திய அணி 6 ரன்னுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இப்படி நான் பார்த்ததில்லை

இதுகுறித்து சூரியகுமார் யாதவ் பேசும்பொழுது ” இஷான் கிஷான் போட்டிக்கு முன்பாக என்ன மாதிரியான தயாரிப்புகளில் ஈடுபட்டார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் முதல் ஆறு ரன்னுக்கு இரண்டு விக்கெட்டுகள் போயிருந்த நிலையில் பவர் பிளே முடியும் போது 75 ரன்கள் கொண்டு வந்த விதத்தில் வேறு யாரும் விளையாடி நான் பார்க்கவில்லை. அது நம்ப முடியாத அளவுக்கு அற்புதமாக இருந்தது”

“200 ரன்களுக்கு மேல் நாம் துரத்தும் போது ஒரு பேட்ஸ்மேன் இடமிருந்து நாம் எதிர்பார்ப்பது இப்படியான ஒரு பேட்டிங்கைதான். மைதானத்துக்கு போய் மனதை திறந்து வைத்து மகிழ்ச்சியாக விளையாட வேண்டும். அவர்களுக்கான இடத்தில் இருந்து அதைச் செய்ய வேண்டும். நான் ஒவ்வொருவரிடமும் விரும்புவது இதைத்தான்”

- Advertisement -

அவர் மேல் எனக்கு கோபம்

“இஷான் கிஷான் எனக்கு பவர் பிளேவில் விளையாடுவதற்கு அதிக வாய்ப்பு கொடுக்கவில்லை. அதில் எனக்கு அவர் மேல் கொஞ்சம் கோபம். (சிரிக்கிறார்) ஆனால் பிறகு என்னால் ரன் எடுத்துக் கொள்ள முடியும் என்று தெரியும். நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை”

இதையும் படிங்க : 300 ரன் அடிச்சாலும் இந்தியா கிட்ட முடியாது.. அவங்க உள்ள வர்றப்பவே இந்த திட்டத்தோட வராங்க – மிட்சல் சான்ட்னர் பேட்டி

“முதலில் இருந்து நான் சொல்லி வருவது போல வலைப்பயிற்சியில் நான் சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டுதான் இருக்கிறேன். கடந்த மூன்று வாரங்களாக நான் ஓய்வில் இருந்தது எனக்கு பெரிய அளவில் உதவியது. குடும்பம் நண்பர்களுடன் நேரத்தை நல்ல முறையில் செலவு செய்தேன். பிறகு நல்ல பயிற்சி அமர்வுகள் கிடைத்தது. நான் உண்மையில் எல்லாவற்றையும் ரசிக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -