இந்தியா நியூசிலாந்து அணிக்கு இடையே இன்று ராய்ப்பூர் மைதானத்தில் இரண்டாவது டி20 போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான உத்தேச இந்திய பிளேயிங் லெவன் எவ்வாறு அமையலாம் என்று பார்க்கலாம்.
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.
பிளேயிங் லெவன் முயற்சி
இந்திய அணி நிர்வாகம் முதல் டி20 போட்டிக்கு வலிமையான முதல் நிலை பிளேயிங் லெவனை களம் இறக்கியது. மேலும் சிவம் துபே இடத்திற்கு குல்தீப் யாதவை வைத்து ஒரு பிளேயிங் லெவனும், அதே இடத்திற்கு ஹர்ஷித் ராணாவை வைத்தும் என இரண்டு பிளேயிங் லெவன் முயற்சிகள் இருக்கிறது.
கம்பீர் இரண்டாவது போட்டியில் இதுபோல புதிய பிளேயிங் லெவனை களம் இறக்குவதற்கு முயற்சி செய்வாரா? என்றும் பேசப்படுகிறது. ஹர்ஷித் ராணா ஓரளவுக்கு பேட்டிங் செய்கின்ற காரணத்தினால், சிவம் துபே இடத்திற்கு அவரை களம் இறக்கி விளையாட வைப்பதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பவுலிங் யூனிட்டை வலிமையாக்க முடியும்.
என்ன நடக்கும்?
அதே சமயத்தில் இன்று நடைபெறுவது இரண்டாவது டி20 போட்டி என்பதால் வெற்றி பெறுவதில் மட்டுமே இந்திய அணி நிர்வாகம் கவனம் செலுத்தும் என கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே பிளேயிங் லெவனில் எந்த விதமான மாற்றமும் செய்யப்படாது என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : விராட் கோலி இல்லை.. இப்போ இந்த பையன் பேட்டிங் செய்யறான்னு தெரிஞ்சாலே டிவியை ஆன் பண்ணிடுவோம் – ரவி சாஸ்திரி புகழாரம்
அபிஷேக் ஷர்மா சஞ்சு சாம்சன், இஷான் கிஷான், சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி, அர்ஸ்தீப் சிங் மற்றும் பும்ரா.






