தற்போது இந்திய ஒரு நாள் அணியில் ஒரு வீரருக்கு வாய்ப்பு தரப்படாத குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மிகவும் வருத்தத்துடன் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
தற்போது இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று தொடர் சமநிலையில் இருக்கிறது. இந்த நிலையில் நாளை மறுநாள் மூன்றாவது போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெறுகிறது.
தன்னம்பிக்கை இல்லாமல் போய்விடும்
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும் பொழுது “உங்களுக்கு தென் ஆப்பிரிக்காவில் விளையாடுவதற்கு ஒரு ஹிட் த டெதக் பவுலர் தேவை. எனவே நீங்கள் ஹர்ஷித் ரானா மற்றும் பிரசித் கிருஷ்ணாவுக்கு போட்டி பயிற்சிக்காக வாய்ப்பு தருகிறீர்கள். ஆனால் இடையில் அர்ஸ்தீப் சிங் பற்றி யாரும் யோசிக்கவில்லை. இது அவர் எத்தனை போட்டிகளில் விளையாடியிருக்கிறார் என்பது பற்றியது கிடையாது”
“அவர் தற்போது என்ன நினைத்துக் கொண்டிருப்பார். அவர் தொடர்ந்து சிறப்பாக செயல்படுகிறார் ஆனாலும் தன்னுடைய இடத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறார். அடுத்து அவர் விளையாடும் பொழுது தன்னம்பிக்கை பாதிப்படைந்திருக்கும். என்ன சொன்னாலும் இந்த விளையாட்டு தன்னம்பிக்கை சார்ந்ததுதான். இப்படி பவுலர்களுக்கு மட்டும் ஏன் தொடர்ந்து நடக்கிறது? பேட்ஸ்மேன்களுக்கு இப்படி நடப்பது கிடையாது”
எனக்கும் இப்படி நடந்தது
“நானும் இவருடைய நிலையில் இருந்திருக்கிறேன். எனக்கு என்ன நடக்கிறது என்று புரியும். எனவே நான் அவருக்காக போராடுகிறேன். நீங்கள் அவர் கையில் பந்தை கொடுக்கும் போதெல்லாம் அவர் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அவர் தலை நிமிர்ந்து பிளேயிங் லெவனுக்குள் வருவதற்கு வாய்ப்பை கொடுங்கள்”
இதையும் படிங்க : ரோகித் சர்மா பற்றி இந்திய பயிற்சியாளர் பேச்சுக்கு பலத்த எதிர்ப்பு.. 5% கூட அவர் செஞ்சதுல நீங்க செய்யல – மனோஜ் திவாரி விமர்சனம்
“இப்போது மக்கள் அவரை மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடுவார்கள் என்று சொல்கிறார்கள். இதனால் இப்போது என்ன பயன்? நான் கேட்பது முதல் இரண்டு போட்டிகளில் அவர் ஏன் விளையாடவில்லை என்பதுதான். அவர் தொடர்ந்து விளையாட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






