இன்று நியூசிலாந்து அணிக்கு எதிராக ராஜ்கோட்டில் விளையாடும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது.
தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டி இன்று துவங்குகிறது. மீண்டும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா விளையாடுவதை பார்க்க இருப்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
பேட்ஸ்மேன் பற்றாக்குறை
இந்த தொடருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ஒரு வேகப்பந்துவீச்சாளரை கூடுதலாக வைத்து நான்கு பேரை சேர்த்து இருந்தார்கள். இதனால் ஒரு பேட்ஸ்மேன் ஏற்கனவே பற்றாக்குறையாக இருந்தது. எனவே இரண்டாவது விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று எதிர்ப்பாராத விதமாக காயம் அடைந்த ரிஷப் பண்ட் இந்த ஒருநாள் தொடரை விட்டு முழுமையாக வெளியேறி விட்டார். இதன் காரணமாக இந்திய பேட்டிங் ஆர்டரில் முதல் ஐந்து இடங்களில் மட்டுமே முழுமையான பேட்ஸ்மேன்கள் களம் இறங்குகிறார்கள். ஆறாவது இடத்தில் இருந்து ஆல்ரவுண்டர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள்.
முக்கியமான எட்டாவது இடம்
இன்றைய போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டில் ஆறாவது இடத்தில் ரவீந்திர ஜடேஜா, ஏழாவது இடத்தில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் எட்டாவது இடத்தில் ஹர்ஷித் ராணா இடம்பெற்று இருக்கிறார்கள். எனவே பேட்டிங் யூனிட்டில் முதல் ஐந்து இடங்களில் இடம்பெற்றுள்ள பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாட வேண்டியது கட்டாயம் ஆகிறது.
இதையும் படிங்க : ஸ்ரேயாஸ் ஐயர் இப்ப இத செஞ்சா பிரச்சனையாயிடும்.. கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணும் – சஞ்சய் பாங்கர் அறிவுறுத்தல்
இந்திய பிளேயிங் லெவன்: சுப்மன் கில், ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல்.ராகுல் ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ரானா குல்திப் யாதவ், சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா.






