இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரானது வருகிற 11-ம் தேதி முதல் நடைபெற உள்ள நிலையில் இதற்காக இந்திய அணி தீவிரமான முறையில் தயாராகி வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் செயலாளரான ஜெய்ஷா ரோஹித் சர்மாவை புகழ்ந்து பிரம்மிப்புடன் பேசியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. மேலும் இந்த ஒரு நாள் தொடருக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியிருக்கிறார்கள். இந்த தொடரானது வருகிற 11-ம் தேதி முதல் நடைபெற உள்ள நிலையில் இந்த இந்திய அணிக்கு சுப்மான் கில் கேப்டனாக தலைமை தாங்குகிறார்.
2027 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பை வரை ரோஹித் சர்மா கேப்டனாக தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரோஹித் சர்மா கேப்டன் பதவியை விட்டு விலகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஒன்றில் தற்போதைய ஐசிசி தலைவரும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் செயலாளருமான ஜெய்ஷா ரோகித் சர்மாவை தான் எப்போதும் கேப்டன் என்று அழைப்பேன் என்று சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது ” நம் கேப்டன் தற்போது இங்கே உட்கார்ந்து இருக்கிறார். அவர் இரண்டு உலக கோப்பைகளை ஜெயித்ததால் நான் எப்போதும் அவரை கேப்டன் என்றே அழைப்பேன். 2023 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பையில் நாங்கள் 10 தொடர் வெற்றிகளை பெற்று மனங்களை வென்றோம். ஆனால் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆனால் டி20 உலக கோப்பைக்கு முன்பாக ராஜ்கோட்டில் இந்த முறை மனங்களை மட்டுமல்லாமல் கோப்பையையும் வெல்வோம் என்று கூறினேன் அது நடந்தது” என்று பேசி இருக்கிறார்.
இதையும் படிங்க:டி20 உலக கோப்பை.. இந்திய பிளேயிங் XI இதுதான்.. இந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது – ரகானே கணிப்பு
2007ம் ஆண்டு எம் எஸ் தோனி தலைமையில் டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி அதற்குப் பிறகு ரோகித் சர்மாவின் தலைமையில் 2024 ஆம் ஆண்டு தான் டி20 உலக கோப்பையை வென்றது. அதற்குப் பிறகு கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையில் கைப்பற்றி சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே ரோஹித் சர்மா அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒரு நாள் விழா கோப்பை வரை விளையாடுவார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.






