தற்போது 14 வயதாகி இருக்கும் வைபவ் சூரிய வன்சி இந்த ஆண்டு இந்திய அணிக்கு அறிமுகமாக முடியுமா? என்பது பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கான வாய்ப்புகள் எப்படி இருக்கிறது? என்பதை பார்க்கலாம்.
மேலும் இந்த ஆண்டு அடுத்த மாதம் டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கிறது. இதற்குப் பிறகு இந்திய டி20 அணியில் மாற்றங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் வெளிப்படையாக தெரிகிறது. குறிப்பாக துவக்க இடத்தில் மாற்றங்கள் நடைபெறலாம்.
பிரமிக்க வைக்கும் சூரியவன்சி
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அதிரடியாக சதம் அடித்து வைபவ் சூரியவன்சி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். இதைத்தொடர்ந்து அண்டர் 19, இந்தியா ஏ அணி, யூத் டெஸ்ட், ரஞ்சி டிராபி என எல்லா பக்கங்களிலும் அதிரடியாக சதங்களை குவித்து வருகிறார்.
தென் ஆப்பிரிக்க அண்டர் 19 அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 63 பந்தில் அதிரடியாக சதம் அடித்திருக்கிறார். இந்த நிலையில் அவரது திறமையை வீணாக்காமல் சீக்கிரம் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வெளியில் இருந்து கருத்துகள் வர ஆரம்பித்திருக்கிறது.
இந்திய அணிக்கு அறிமுகமாக முடியுமா?
தற்போது டி20 உலகக் கோப்பைத் தொடர் இருப்பதால் இந்திய டி20 அணியில் எந்த மாற்றங்களும் நடக்காது. மேலும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான அணியில் அவரை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகளை கிடையாது. ஆனால் டி20 உலகக் கோப்பை தொடர் முடிவடைந்ததும் அவர் அறிமுகம் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் அப்போது இந்திய அணி நிர்வாகம் முழுக்க ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு தயாராவதில் கவனம் செலுத்தும்.
இதையும் படிங்க : நியூசி டி20 தொடர் திலக் வர்மா காயம்.. உலக கோப்பையில் ஆடுவாரா.. ஸ்ரேயாஸ் ரியான் பராக் யாருக்கு வாய்ப்பு? – வெளியான புதிய தகவல்கள்
இந்த நேரத்தில் இந்திய டி20 அணியில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கும் போது வைபவ் சூரியவன்சி அறிமுகம் ஆவதற்கு வாய்ப்புகள் உண்டு. மேலும் அதில் அவர் சிறப்பாக செயல்படும் பொழுது, அபிஷேக் ஷர்மாவுடன் துவக்க வீரராகவும் வர முடியும். இந்த நேரத்தில் சஞ்சு சாம்சன் தன்னுடைய இடத்தை இழப்பார். இசான் கிஷான் மற்றும் ஜிதேஷ் சர்மா இருவரும் இந்திய அணியில் விக்கெட் கீப்பர்களாக வாய்ப்பு பெறுவார்கள் என்று தெரிகிறது. இந்த ஆண்டு இந்திய அணிக்கு வைபவ் சூர்யவன்சி அறிமுகமாகிவிடுவார் என்று கூறப்படுகிறது.






