இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஆசஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி இருக்கும் நிலையில் கடைசி மற்றும் ஐந்தாவது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் மார்க் வாக் அடுத்த தலைமுறையில் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக மாறப் போகும் வீரர் குறித்து சில கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கிறார்.
நவீன கால கிரிக்கெட்டில் டி20க்கு முக்கியத்துவம் கொடுக்கும் இளம் வீரர்களில் ஒரு சில வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட் அதிரடியாக அடித்த தங்களை திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். அப்படி பார்க்கும்போது இந்தியாவின் கில், ஜெய்ஸ்வால் அடுத்த தலைமுறையின் சிறந்த டெஸ்ட் வீரர்களாக பார்க்கப்படுகிறார்கள்.
மேலும் ஆஸ்திரேலியா மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஹரி ப்ரூக் இந்த பட்டியலில் முக்கியத்துவம் பெரும் வீரராக அமைந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரரான மார்க் வாக் அடுத்த தலைமுறை வீரர்களில் இந்தியாவின் ஜெய்ஷ்வால் சிறந்த வீரராக இருப்பார் என்று தேர்வு செய்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்த போட்டியில் என்னை பொறுத்தவரை மூன்று வீரர்கள் இருக்கிறார்கள். இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்தின் ஹாரி புரூக் நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா என சிறந்த வீரர்கள் உள்ளனர். இருப்பினும் நான் 24 வயதான இந்திய வீரர் ஜெய்ஸ்வாலை தேர்வு செய்கிறேன். அவர் ஏற்கனவே இரட்டை சதம் அடித்திருக்கிறார் மேலும் அவரது பேட்டிங் சராசரி 50க்கும் குறையாமல் இருக்கிறது.
இதையும் படிங்க:தம்பி இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா.? 30 நாள்ல இப்படியா சம்பவம் பண்ணுவ வைபவ் குறித்து வியக்கும் அஸ்வின்
நிச்சயமாக இந்த இளைஞனிடம் ஏதோ ஒரு சிறப்பு இருக்கிறது. அடுத்த சாம்பியன் பேட்ஸ்மேன் ஆக உயரடுக்கு குழுவில் உயரப்போகும் வீரராக நான் ஜெய்ஸ்வாலை தேர்வு செய்கிறேன். அவர் ஒரு அற்புதமான கிரிக்கெட் வீரர், இந்த இளம் இந்திய வீரர் தான் எனது முதல் தேர்வு” என்று அவர் பேசி இருக்கிறார்.






