கில்லை நீக்கியது சரினு நினைக்காதீங்க.. அப்படி செஞ்சது தப்பு.. இதைத்தான் செஞ்சிருக்கணும் – இந்திய முன்னாள் வீரர் பேச்சு

0
18
Gill

இந்திய டி20 அணியின் துணை கேப்டன் சுப்மன் கில்லை டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இருந்து நீக்கி இருக்கக் கூடாது என இந்திய முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானி கூறியிருக்கிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் நடைபெற்ற இருந்தது. சில வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. அதே சமயத்தில் இந்திய டி20 அணியின் துணை கேப்டன் சுப்மன் கில்லை அதிரடியாக நீக்கி இருந்தார்கள். இது இந்திய ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத முடிவாகவும், அதே சமயத்தில் மகிழ்ச்சி அடையும் முடிவாகவும் இருந்தது.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டில் புதிய அணுகுமுறை

கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா நல்ல பார்மில் இல்லாத காரணத்தினால் கடைசி போட்டியில் அவர் வெளியில் அமர்ந்தார். இதற்குப் பின்னணியில் பயிற்சியாளர் கம்பீர் பங்கு இருப்பதாக அப்பொழுது பரவலாக பேசப்பட்டது. பிறகு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்கள்.

இதைத்தொடர்ந்து டி20 உலகக்கோப்பைக்கு சில வாரங்களே இருக்கும் நிலையில், இந்திய டி20 அணியின் துணை கேப்டன் கில் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். இதுவெல்லாம் இந்திய கிரிக்கெட்டில் முன்பு நடக்காத விஷயங்களாக இருக்கிறது. இதை பலர் வரவேற்றாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கில்லை நீக்கி இருக்கக் கூடாது

இதுகுறித்து சையத் கிர்மானி பேசும் பொழுது ” உங்களுக்காக முந்தைய தொடர்களில் சிறப்பாக விளையாடியிருக்கும் ஒரு வீரரை, அவரின் தற்போதைய பார்ம் சரியில்லாமல் ஏற்ற இறக்கத்துடன் இருந்தால் நீங்கள் அதை தாங்கிக் கொள்ள வேண்டும். கில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தார். அதில் அவருடைய ஐகானிக் இன்னிங்ஸ் இருந்தது”

இதையும் படிங்க : 518 ரன்ஸ்.. ஹெட் பிரம்மாண்ட சாதனை.. கேப்டன் ஸ்மித் அசத்தல் சதம்.. இங்கிலாந்தை ஆஸி அணி புரட்டி எடுத்தது

“கில் இங்கிலாந்தில் சிறப்பாக செயல்பட்ட விதத்தை நாம் மறந்து புறக்கணித்து விடக்கூடாது. ஒரு வீரர் மோசமான பார்மில் இருந்தால் அவரை உடனடியாக அணியில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்று அர்த்தம் இல்லை. எனவே பார்ம் காரணமாக அவரை அணியில் இருந்து நீக்கி இருந்தால் அது சரியான முடிவு என நீங்கள் யாரும் நினைத்துக் கொள்ள வேண்டாம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -