3 போட்டிக்கு அப்புறம் தயாராவது சரியல்ல.. கில்லின் இந்த முடிவு மிகவும் சிறப்பான ஒன்று- ரவிச்சந்திரன் அஸ்வின் ஆதரவு

0
30

ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய அணிக்கு 15 நாட்கள் கொண்ட பயிற்சி முகாம் நிச்சயம் தேவை என்று இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மான் கில் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் பரிந்துரை வைத்ததாக நேற்று தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் கேப்டனின் இந்த கோரிக்கை குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சமீபகாலமாக டெஸ்ட் தொடரில் பெரிய தோல்விகளை சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சொந்த மண்ணில் தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வருகிற நிலையில் இந்திய கேப்டன் மற்றும் பயிற்சியாளர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் சுப்மான்கில் தொடர் தோல்விகளை நிறுத்துவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் முக்கியமான கோரிக்கையை வைத்திருந்தார்.

அதாவது ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய அணிக்கு 15 நாட்கள் கொண்ட பயிற்சி முகாம் தேவை என்று கூறியிருந்தார். அந்த பயிற்சி முகாம் டெஸ்ட் தொடருக்கு போதிய அளவில் தயாராக முடியும் என்று அவர் உறுதியாக நம்புகிறார். இந்த சூழ்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் அவரது கோரிக்கையை முழுமனதாக ஆதரித்திருக்கிறார். அவரது இந்த கோரிக்கை எதற்காக தேவை என்று இங்கிலாந்து ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை காரணம் காட்டியும் சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “டெஸ்ட் தொடருக்கு முன்பு 15 நாட்கள் கொண்ட பயிற்சி முகாம் தேவை என்கிற யோசனை யாருடையதாக இருந்தாலும் அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அப்படி ஒரு முகாம் இருந்தால் நீங்கள் ஒவ்வொரு தொடருக்கும் சிறப்பாக தயாராகி விடுவீர்கள். இப்போது கூட ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி போதிய அளவில் தயாராகவில்லை என்கிற பேச்சுக்கள் இருக்கின்றன. மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு தான் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் தயாரான மனநிலையில் இருந்தது. பலமுறை நாம் சுற்றுப்பயணம் செய்யும் போது பயிற்சி போட்டிகளில் நாம் விளையாடுவதில்லை.

இதையும் படிங்க:பிசிசிஐ உத்தரவை ரோகித் விராட் மீறினார்களா?.. விதிக்கப்பட்ட கட்டுப்பாடு என்ன?.. வெளியான முழு விபரங்கள்

இந்த பயிற்சி முகாம் இல்லை என்றால் நீங்கள் டெஸ்ட் தொடருக்கு தயாராக ஒன்று அல்லது இரண்டு போட்டிகள் தேவைப்படும். இந்த 15 நாள் முகாம் உங்களை டெஸ்ட் மனநிலைக்கு நிச்சயம் கொண்டு வரும். எனவே இந்த யோசனை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் உங்களால் அதை செய்ய முடியுமா என்று நினைக்கலாம். ஆனால் முடியும் என்று நினைத்தால் நிச்சயமாக இதனை செயல்படுத்த முடியும். இது சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு சிந்தனை” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -