நான் ஷமி இடத்தில் இருந்தால் இதைத்தான் செய்வேன்.. இதை விடவே கூடாது – இர்பான் பதான் பேச்சு

0
12
Shami

இந்தியத் தேர்வுக்குழு முகமது ஷமியை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இந்த நிலையில் அவர் மீண்டும் இந்திய அணிக்குள் திரும்புவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இர்பான் பதான் கூறியிருக்கிறார்.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே வருகின்ற 11ம் தேதி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி துவங்குகிறது. இந்த தொடரில் முகமது ஷமி தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் அவர் புறக்கணிக்கப்பட்டார்.

- Advertisement -

47 விக்கெட்டுகள்

இந்திய கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திலும் முகம்மது ஷமி புறக்கணிக்கப்பட்ட பிறகு மட்டும் அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் மொத்தம் மூன்று வடிவத்திலும் 47 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். அவர் முழுவதுமாக தன்னை நிரூபித்த பிறகும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.

இதுகுறித்து இர்பான் பதான் கூறும்பொழுது ” முகமது ஷமி எதிர்காலம் எப்படி இருக்கும்? அவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு புதியவர் கிடையாது. மேலும் அவர் 400 முதல் 450 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். நீங்கள் இந்த எண்ணிக்கையில் விக்கெட் கைப்பற்றிய பிறகும் உங்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் இருந்து கொண்டேதான் இருக்கும். எனவே அவர் இதைச் செய்ய வேண்டும்”

- Advertisement -

நானாக இருந்தால் இதுதான் செய்வேன்

“ஷமி ஏற்கனவே 200 ஓவர்கள் பந்து வீசி இருக்கிறார். அவர் உடல் தகுதி சிறப்பாக இருப்பதாக காட்டி இருக்கிறார். மேலும் தேர்வுக் குழுவுக்கு மட்டுமே அவர் ஏன் தேர்வு செய்யப்படவில்லை? என்பது குறித்து தெரியும். நான் மட்டும் அவருடைய இடத்தில் இருந்தால் ஐபிஎல் தொடரில் பெரிய குழப்பத்தை அவர்களுக்கு உண்டாக்குவேன்”

இதையும் படிங்க : திரும்பி வந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. கேப்டனாக புதிய பொறுப்பு.. 2 அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சி.. வெளியான தகவல்கள்

“நான் ஐபிஎல் தொடரில் புதிய பந்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு என்னை மீண்டும் நிரூபிப்பேன். உள்நாட்டு கிரிக்கெட்டில் நிரூபிப்பதை விட ஐபிஎல் தொடரில் நிரூபிப்பது வேறு விதமாக இருக்கும். அப்படி செய்யும்போது அவர்களுக்கு பெரிய அழுத்தம் உண்டாகும். எனவே அவர் இதைச் செய்ய வேண்டும்”

- Advertisement -