யுவராஜ் சிங்தான் என் முதல் ஹீரோ.. நான் வளர்ந்ததே அவரைப் பார்த்துதான்.. இளம் ஆஸி வீரர் பிரமிப்பு

0
222

ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வரும் உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடரான பிக் பாஸ் லீக் டி20 தொடரில் அடிலைட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்காக விளையாடி வரும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஜெர்சிஸ் வாடியா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

அவர் ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாடி வந்தாலும் இந்தியாவின் யுவராஜ் சிங் மற்றும் விராட் கோலி ஆகியோர்தான் தனது சூப்பர் ஹீரோக்களாக தான் கருத்துவதாக சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஒன்று ஆஸ்திரேலியாவிலும் பிக் பாஸ் டி20 லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் அடிலைட் ஸ்டிரைக்கர் அணிக்காக களம் இறங்கி விளையாடி வரும் 24 வயது வீரரான ஜெர்சிஸ் வாடியா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். முதல் சில ஆட்டங்களில் விரைவாக தோல்வியடைந்தாலும் அதற்குப் பிறகு பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு எதிரான போட்டியில் காட்டினார்.

பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு எதிரான போட்டியில் 16 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 34 ரன்கள் குவித்தார். இதன் மூலமாக ஒரு ஃபினிஷர் ஆக தன்னை ஆஸ்திரேலியா கிரிக்கெட் உலகிற்கு காட்டினார் என்று தான் கூற வேண்டும். இந்த சூழ்நிலையில் அவர் இரண்டு இந்திய சூப்பர் ஸ்டார்களை தனது சூப்பர் ஹீரோக்களாக கருதுவதாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “நான் வளரும் பருவத்தில் எனக்கு யுவராஜ் சிங்தான் முன்மாதிரியாக இருந்தார். இடது கை ஆட்டக்காரரான அவர் மிகச் சிறந்த சுழற் பந்துவீச்சையும் பேட்டிங் திறனையும் கொண்டிருந்தார். அவர் தனது வாழ்க்கையில் புற்றுநோய் போன்ற மிகவும் கடினமான காலகட்டத்தைக் கடந்து ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 150 ரன்கள் எடுத்து தனது குறிப்பிடத்தக்க கம் – பேக்கை கொடுத்தார். அவர்தான் எனது முக்கிய ஹீரோ.

இதையும் படிங்க:அவர் சிஎஸ்கே கதவை தட்டல.. இடிச்சு உடைச்சிட்டு இருக்காரு.. சீக்கிரம் இந்திய அணிக்குள் வருவார் – ரவிச்சந்திரன் அஸ்வின் கணிப்பு

அவருக்குப் பிறகு வெளிப்படையாக ஒருவர் குறித்து கூற வேண்டும் என்றால் வெள்ளை பந்து கிரிக்கட்டில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வரும் விராட் கோலியைக் குறிப்பிடுவேன். அவர் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் விதம் பிரமிக்கத்தக்கது. அதேபோல ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டை பார்க்கும் போது சுதந்திரமாக விளையாடும் அவரது மனநிலை ஈர்க்கிறது” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -