தற்போது ஆர்சிபி அணியின் பிளேயிங் லெவனில் எந்த ஒரு வீரருக்கு முதலில் வாய்ப்பு கிடைக்காது என்றும், அவர்கள் மினி ஏலத்தில் எப்படியான வீரர்களை வாங்கி இருக்கிறார்கள் என்றும், அந்த அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே பேசியிருக்கிறார்.
சில வாரங்களுக்கு முன்பு நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் ஆர் சி பி அணி சிறந்த பேக்கப் வீரர்களை வாங்கி, ஏற்கனவே அசுர பலத்தில் இருக்கும் அணியை மேலும் பலமாக்கி அசத்தியிருக்கிறார்கள். இந்த முறை அவர்கள் கோப்பையை வென்றாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
ஆர்சிபி-யின் மினி ஏலம்
இந்த முறை ஆர்சிபி அணி தங்களது மினி ஏலத்தில் வெளியே விட்ட லிவிங்ஸ்டன் வாங்க முயற்சி செய்தது. அவர்கள் பக்கம் அதிர்ஷ்டம் இருக்க 7 கோடி ரூபாய்க்கு இந்திய வீரராக வெங்கடேஷ் ஐயர் கிடைத்தார். மேலும் பின் சால்ட்டுக்கு மாற்றாக ஜோர்டான் காக்ஸ் அவர்களுக்கு கிடைத்திருக்கிறார்.
மேலும் பவுலிங் யூனிட்டை பார்க்கும் பொழுது நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஹேசில்வுட்டுக்கு பேக்கப்பாக ஜேக்கப் டப்பி, யாஸ் தயாலுக்கு பேக்கப்பாக அவரைப் போலவே பந்து வீசும் மங்கேஸ் யாதவ் ஆகியோரை வாங்கினார்கள். இத்துடன் அவர்களுடைய ஸ்பின் யூனிட்டை வலிமைப்படுத்துகிறேன் என ரவி பிஸ்னாய் ஏலத்தில் இருந்த பொழுதும் அவர்கள் செல்லவில்லை.
பயமுறுத்த விரும்பவில்லை
இதுகுறித்து அனில் கும்ப்ளே பேசியபோது “வெங்கடேஷ் ஐயர் ஆரம்பத்தில் ஆர்சிபி அணியின் பிளேயிங் லெவனில் இருக்க மாட்டார். வெற்றி பெறும் அணியில் அவர்கள் மாற்றத்தை செய்ய விரும்ப மாட்டார்கள். மேலும் தங்களிடம் இருக்கும் ஸ்பின்னர் சுயாஸ் சர்மாவை பயமுறுத்த விரும்பாததால்தான், அவர்கள் ரவி பிஸ்னாய் ஏலத்தில் இருந்த பொழுதும் கூட எடுப்பதற்கு செல்லவில்லை”
இதையும் படிங்க : விஜய் ஹசாரே டிராபி.. 21 வயதான கேகேஆர் வீரருக்கு தலையில் காயம்.. உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை
“அவர்கள் தங்களுடைய கோர் வீரர்களை அப்படியே தொடர முடியாத ஏதாவது ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், அதற்கு மாற்று வீரர்களை மினி ஏலத்தில் சிறப்பான முறையில் வாங்கி இருக்கிறார்கள். ஹேசில்வுட், பில் சால்ட், யாஸ் தயால் ஆகியோருக்கு பேக்கப்பாக ஜேக்கப் டப்பி, ஜோர்டான் காக்ஸ் மற்றும் மங்கேஸ் யாதவை வாங்கி இருக்கிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.






