மெக்கலம் பயிற்சியாளராக இருக்க தகுதி இல்லாதவர்.. டிராவிட்டை பார்த்து கற்றுக்கொள்ளனும் – சடகோபன் ரமேஷ் விமர்சனம்

0
31
Ramesh

தற்போது டெஸ்ட் கிரிக்கெட் பயிற்சியாளராக இருப்பதற்கு மெக்கலம் தகுதி இல்லாதவராக இருக்கிறார் என சடகோபன் ரமேஷ் விமர்சனம் செய்திருக்கிறார்.

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு மெக்கலம் வந்த பிறகு, இங்கிலாந்து டெஸ்ட் அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அதிரடியான முறையை பின்பற்ற ஆரம்பித்தது. அவர்கள் அதிரடியாக விளையாடி ஒரு சில போட்டிகளில் வெற்றி பெற்றாலும், அவர்களால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் எந்த தாக்கத்தையும் செலுத்த முடியவில்லை.

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் சம்மட்டி அடி

தற்போது இங்கிலாந்து டெஸ்ட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட உலகப் புகழ்பெற்ற ஆசஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த தொடரில் முதல் மூன்று போட்டிகளில் மொத்தம் 11 நாட்கள் மட்டுமே விளையாடி, மூன்று போட்டிகளையும் தோற்று தொடரை இழந்து விட்டது.

இந்த நிலையில் இன்று நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியிலும் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் மோசமாக விளையாடி விக்கெட்டுகளை கொடுத்து வருகிறது. இத்தனை வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இவ்வளவு மோசமான தோல்விகளை சந்திக்க கூடிய அணியாக இங்கிலாந்து இதற்கு முன்பு இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

டிராவிட் சிறந்த உதாரணம்

இதுகுறித்து சடகோபன் ரமேஷ் பேசும் பொழுது ” தற்போது சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு பயிற்சியாளராக இருப்பதற்கான தகுதி மெக்கலமுக்கு இல்லை. அவர் அதிரடியாக விளையாடக்கூடிய சிறந்த வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் ஒரு பயிற்சியாளராக அவர் தன்னுடைய ஆட்ட பாணியை மொத்த அணிக்கும் கொண்டு வர நினைக்கிறார். பிரேக் இல்லாத ஒரு வண்டி போல தற்போது இங்கிலாந்து டெஸ்ட் அணி ஆகிவிட்டது. ஒரு பயிற்சியாளர் எப்பொழுதும் இப்படி நடந்து கொள்ளக் கூடாது”

இதையும் படிங்க: விஜய் ஹசாரே 2025.. ரோகித்துக்கு முதல் பந்தில் நடந்த சோகம்.. விராட் அதிரடியில் மிரட்டல்.. வித்தியாசமான இரண்டு சம்பவங்கள்

” ராகுல் டிராவிட் டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் தலைசிறந்த பேட்ஸ்மேன். தடுப்புச் சுவராக இந்திய அணிக்கு இருந்தவர். அப்படிப்பட்டவரின் பயிற்சியில்தான் இந்தியா டி20 வடிவத்தில் உலக கோப்பையை வென்றது. அவர் தன் ஆட்ட பாணியை அணிக்கு கொண்டு வரவில்லை. அவர் டி20 வடிவத்தை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி வீரர்களுக்கு சுதந்திரம் கொடுத்து விளையாட வைத்தார். இதைப் பார்த்து மெக்கலம் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -