என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் கணிக்க முடியாதவர் இந்த இந்திய வீரர்தான் – ஆஸி ஸ்காட் போலண்ட் கணிப்பு

0
154

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பகல் இரவு பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளராக இருக்கும் ஸ்காட் போலந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் பந்த வீசுவதற்கு கடினமாக இருந்த வீரர் குறித்து சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

கிறிஸ்மஸ் தினத்தை ஒட்டி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நான்காவது கிரிக்கெட் போட்டி இன்று துவங்கி இருக்கும் நிலையில் இதனை பாக்ஸிங் டே டெஸ்ட் என்று அழைக்கப்படும். மேலும் ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே ஆஷஸ் தொடரை கைப்பற்றி இருப்பதால் வரும் இரண்டு போட்டிகளில் பெரிய மாற்றங்கள் இருக்கப் போவதில்லை என்று தெரிகிறது.

இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடிய போது மூன்றில் மட்டும் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்ட் கோப்பையை கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். அந்தத் தொடரில் 21 விக்கெட்டுகள் கைப்பற்றி அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவராக இருந்த நிலையில் தான் பந்து வீசுவதற்கு ரிஷப் பண்ட் கடினமாக வீரராக இருந்ததாக சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை இந்தியாவைச் சேர்ந்த ரிஷப் பண்ட் மிகவும் கணிக்க முடியாத வீரராக இருந்திருக்கிறார். இதனை ஏன் கூறுகிறேன் என்றால் நீங்கள் எதிர்பாராத நேரத்தில் உங்கள் பந்துவீச்சில் சிக்ஸர் அடிப்பார். நீங்கள் சுதாரித்து அடுத்த பந்தை அதே மாதிரியாக வீசும் போது அதனை சிக்ஸருக்கு முயற்சிக்காமல் தடுத்து ஆடி விடுவார்.

இதையும் படிங்க:வைபவ் சூரியவன்சிய சீக்கிரம் இந்திய அணியில சேருங்க.. டிராவிட் முயற்சி செய்கிறதா கேள்விப்பட்டேன் – ஸ்ரீகாந்த் கோரிக்கை

இதனால் என்னை பொறுத்தவரை ரிஷப் பண்ட் எனக்கு கணிக்க முடியாத வீரராக இருந்திருக்கிறார்” என்று அவர் பேசி இருக்கிறார். தற்போது நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்பு வரை ஆஸ்திரேலியா அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

- Advertisement -