நேற்று விஜய் ஹசாரே டிராபியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சதம் அடித்தார்கள். இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பாராட்டி பேசியிருக்கிறார்.
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் தற்போது ஒரே வடிவத்தில் மட்டும் விளையாடி வருவதால் அவர்களுக்கு நிறைய போட்டி பயிற்சிகள் தேவைப்படுகிறது. எனவே அவர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது
முதல் முக்கிய விஷயம்
இது குறித்து ஹர்பஜன் சிங் கூறும்பொழுது ” விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நேற்று டெல்லி அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் விராட் கோலி இருந்தது அந்த இளம் வீரர்களுக்கு அற்புதமான விஷயம். அவரிடமிருந்து அவர்கள் நிறைய கற்றுக் கொண்டிருக்க முடியும்”
“இதேபோல மும்பை ட்ரெஸ்ஸிங் ரூமில் ரோஹித் சர்மா இருந்ததும் முக்கியமான விஷயம். மும்பை பெரிய அணியாக இருந்து பல தொடர்களை வென்று இருந்தாலும் கூட, ரோஹித் சர்மா அணிக்குள் இருக்கும்பொழுது அது அந்த வீரர்களுக்கு நிறைய கற்றுக் கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது”
இரண்டாவது முக்கிய விஷயம்
“இருவருமே தற்போது ரன்கள் எடுக்கிறார்கள். இது மிகவும் முக்கிய நல்ல அறிகுறி. நீங்கள் எந்த அணிக்கு எதிராக ரன்கள் எடுக்கிறீர்கள் என்பது இங்கு பிரச்சனை கிடையாது. இது உங்களுக்கு வலை பயிற்சி போல அமைவது இல்லை. இது உங்களுக்கு நேரடியான போட்டி பயிற்சியாக அமைகிறது”
இதையும் படிங்க : ஜெய்ஸ்வால் என்ன தவறு செய்தார்? இந்திய அணியில் ஏன் சேர்க்கவில்லை.. வெங்சர்கார் கேள்வி
” மேலும் நீங்கள் சதம் அடிக்கிறீர்கள். சதம் அடிப்பது ஒரு பழக்கமாக மாறும்பொழுது அது மிகச் சிறப்பான விஷயம். நீங்கள் எந்த அணிக்கு எதிராக அடிக்கிறீர்கள் என்பதெல்லாம் விஷயம் கிடையாது. நீங்கள் ரன்கள் அடிக்கிறீர்கள் என்பது மட்டும்தான் விஷயம். எனவே இவர்கள் இருவரும் ஒரு வடிவத்தில் விளையாடுகிறார்கள் குறைந்த போட்டிகளில் விளையாடுகிறார்கள் என்பதெல்லாம் இல்லை. ரன் அடிக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்” என்று கூறியிருக்கிறார்.






