இந்திய கிரிக்கெட் அணியின் மகத்தான பேட்ஸ்மேனான விராட் கோலி டி20 மற்றும் டெஸ்ட் பார்மெட்டில் இருந்து ஓய்வு பெற்று தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார்.
இந்த சூழ்நிலையில் விராட் கோலி கேப்டன்ஷிப் குறித்து இந்திய முன்னாள் வீரர்களான ஹர்பஜன்சிங் மற்றும் சஞ்சய் மஞ்சுரேக்கர் ஆகியோர் சில முக்கிய கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார்கள்.
2017 ஆம் ஆண்டுக்கு பிறகு எம்எஸ் தோனி தனது கேப்டன் பதவியில் இருந்து விலக, அதற்குப் பிறகு விராட் கோலி இந்திய அணியின் முழு நேர கேப்டனாக மாறினார். அந்த சமயத்தில் அதற்கு இடைப்பட்ட ஆண்டுகளில் டி20 உலக கோப்பை மற்றும் ஒரு நாள் உலகக் கோப்பை என்று விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி விளையாடியது.
வலுவான அணியாக இருந்த போதிலும் இந்திய அணியால் ஒரு ஐசிசி கோப்பையை கூட விராட் கோலியின் தலைமையில் வெல்ல முடியவில்லை. மேலும் மக்களும் ஐசிசி கோப்பைகளை வென்ற கேப்டனையே பெரிதாக மதிக்கிறார்கள் எனவும் தனது ஆதங்கத்தை இன்றிய முன்னாள் கிரிக்கெட் வீரரான சஞ்சய் மஞ்சுரேக்கர் மற்றும் டிவில்லியர்ஸ் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
இது குறித்து முதலில் ஹர்பஜன் சிங் பேசும்போது “விராட் கோலியிடம் அப்போது இருந்த இந்திய அணி எப்படிப்பட்டது என்றால் அந்த அணியால் மூன்று அல்லது நான்கு உலக கோப்பைகளை வென்றிருக்க முடியும். அப்படி அவர்கள் ஜெயிக்கவில்லை என்றால் அவர்களுக்கு ஒரு காரணம் நிச்சயமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்போது அவரிடம் ஒரு வலுவான அணியில் இருந்தது என்று மட்டும் எனக்கு உறுதியாக தெரிகிறது” என்று ஹர்பஜன் சிங் பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க:பும்ரா ரிஷப் பண்ட் என்னிடம் மன்னிப்பு கேட்டார்கள்.. ஆனா எனக்கு எதுக்குனே தெரியல – டெம்பா பவுமா பேட்டி
மற்றொரு கிரிக்கெட் வீரரான சஞ்சய் மஞ்சுரேக்கர் ” விராட் கோலி கேப்டனாக இருந்தபோது அணி தேர்வு ஒரு பிரச்சினையாக இருந்தது. ரவி சாஸ்திரி மற்றும் விராட் கோலியின் தலைமையிலான அணி தேர்வு என்பது எனக்கு பெரிய கவலையாக இருந்தது என்று பேசி இருக்கிறார். அதனால்தான் அவர்களால் உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை” என்று அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கிறது. இது குறித்து டிவில்லியர்ஸ் மக்கள் ஒரு கேப்டனை உலகக் கோப்பைகளை வைத்து மதிப்பிடுவது எனக்கு எரிச்சல் ஊட்டுகிறது எனவும், அவர் கோப்பைகளை வெல்லவில்லை என்றால் அவர் பயன் அற்றவர் என்பது நியாயமில்லாதது” என்று பேசி இருக்கிறார்.






