இந்திய t20 அணியின் துணை கேப்டன் மற்றும் கேப்டன் இருவருமே ரன் அடிக்காத பொழுதும் கில் மட்டுமே நீக்கப்பட்டிருக்கிறார் என இர்ஃபான் பதான் கூறியிருக்கிறார்.
நேற்று டி20 உலகக் கோப்பை இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் இருந்து துணை கேப்டன் கில் அதிரடியாக நீக்கப்பட்டார். மேலும் ரன் சரியாக எடுக்காமல் இருந்து வரும் கேப்டன் சூரியகுமார் யாதவ் கேப்டனாகவே தொடர்கிறார்.
ஒரே படகில் பயணம் செய்தனர்
இதுகுறித்து இர்பான் பதான் பேசும் பொழுது ” கிரிக்கெட் ஒரு சுவாரசியமான விளையாட்டு. துணை கேப்டன் கில்லுக்கு சரியாக ரன்கள் வராமல் இருந்தது. இதனால் அவர் டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அதே சமயத்தில் சூரியகுமார் யாதவும் ரன்கள் எடுக்க வில்லை. அவருடைய ஸ்டிரைக் ரேட் மற்றும் ஆவரேஜ் குறைந்துவிட்டது”
” இருவரும் ஒரே படகில் பயணம் செய்து வந்தார்கள். ஆனால் துணை கேப்டன் கில் மூழ்கி விட்டார் சூரியகுமார் யாதவ் கரையேறிவிட்டார். நான் கேப்டனை நீக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் இந்த விளையாட்டில் இப்படித்தான் நடக்கும். பலவீரர்கள் இந்த கட்டத்தை கடந்து வந்திருக்கிறார்கள்”
எட்டாவது இடம்
” தற்போதைய இந்திய டி20 அணியில் எட்டாவது இடத்தில் பேட்டிங் வேண்டும் என விரும்புகிறார்கள். இந்த இடத்தில் விளையாடுவதற்கு தற்பொழுது இந்திய அணியில் நிறைய ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள். ஹர்ஷித் ரானா கூட எட்டாவது இடத்தில் விளையாட முடிவது சிறப்பான விஷயம்”
இதையும் படிங்க: 3-0.. இன்னும் ரெண்டு மேட்ச் மீதம்.. ஆஸியின் அசத்தலான பினிஷ்.. இங்கிலாந்து தொடரை இழந்து சோகம்
” மேலும் சஞ்சு சாம்சன் இப்பொழுது தொடக்க ஆட்டக்காரராக வருவதால், இந்திய அணி ஆரம்பத்தில் இருந்து அதிரடியான பெரிய துவக்கத்தை நோக்கி செல்லும். இது இந்திய டி20 அணி இப்படித்தான் இருக்கும். இப்போது அவர்கள் விரும்பிய படி அவர்களுக்கு ஒரு தொடக்க ஜோடி கிடைத்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
.






