தற்போது 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசியக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொடரின் முதல் அரை இறுதி போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. பாகிஸ்தான் பங்களாதேஷ் அணியை வென்று இறுதிப் போட்டிக்கு வந்திருக்கிறது.
முதல் சுற்றில் அபாரம்
இந்தியா பாகிஸ்தான் அணிகள் முதல் சுற்றில் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 240 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான அணி 150 ரன்கள் மட்டுமே எடுத்து 90 ரன்கள் வித்தியாசத்தில் சுருண்டது.
தற்போது இந்தத் தொடரில் வைபவ் சூரியவன்சி ஒரு இரட்டை சதம் அடித்திருக்கிறார். ஆயுஸ் மாத்ரே நல்ல பேட்டிங் டச்சில் இருக்கிறார். ஆர்சிபி அணிக்கு வாங்கப்பட்ட வியான் மல்கோத்ரா அரையிறுதியில் அதிரடி சதம் அடித்து பார்முக்கு திரும்பி இருக்கிறார். மேலும் இந்தத் தொடரில் மூன்று அரை சதங்கள் அடித்து ஆரோன் ஜார்ஜ் சிறப்பாக இருக்கிறார். ஒட்டுமொத்தமாக இந்திய அணி நல்ல பார்மில் இருக்கிறது.
எந்த டிவியில் எந்த நேரத்தில் பார்க்கலாம்?
எனவே முதல் சுற்றில் தோல்வி அடைந்ததற்கு பதிலடி கொடுப்பதற்கு பாகிஸ்தான் அணி தயாராகி வரும் என்பதால் இந்த போட்டி மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இதையும் படிங்க : கில்லை நீக்கியது கொஞ்சமும் சரியில்லை.. சுத்தமா தெளிவா இல்லாம இருக்காங்க – தினேஷ் கார்த்திக் பேச்சு
மேலும் நாளை நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி காலை 10:30 மணிக்கு துவங்குகிறது. ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடைபெறும் இந்த போட்டியை டிவி மற்றும் ஆன்லைனில் சோனி தொலைக்காட்சியில் பார்க்கலாம்.






