இன்று அறிவிக்கப்பட்டுள்ள 2026 டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் துணை கேப்டன் சுப்மன் கில் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். அவரை நீக்கியதற்கான காரணம் குறித்து தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்திருக்கிறார்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் சுப்மன் கில் மற்றும் ஜிதேஷ் சர்மா இருவரும் நீக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுடைய இடத்திற்கு இஷான் கிஷான் மற்றும் ரிங்கு சிங் இருவரும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி
இந்திய டி20 அணிகள் ஏற்கனவே மூன்று சதங்கள் துவக்க இடத்தில் அடித்த சஞ்சு சாம்சன் இருக்கும்போது, மேலும் டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஜெய்ஸ்வால் இருக்கும்பொழுது, சுப்மன் கில்லை இந்திய டி20 அணிக்கு கொண்டு வந்தது மட்டும் இல்லாமல் துணை கேப்டன் பொறுப்பையும் கொடுத்தது பெரிய விமர்சனங்களை உருவாக்கி இருந்தது.
மேலும் அவர் கொடுத்த எந்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளாமல் தொடர்ந்து ரன் ஏதும் எடுக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் அதிரடியாக அணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். தற்போது இதற்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.
அஜித் அகர்கர் விளக்கம்
இதுகுறித்து தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறும் பொழுது “கில்லின் பேட்டிங் தரம் குறித்து எங்களுக்கு எந்த சந்தேகமும் கிடையாது. சமீபத்தில் அவர் ரன்கள் எடுக்காமல் இருந்தார். ஆனால் அது நாங்கள் அவரை எவ்வளவு உயர்வாக மதிப்பிடுகிறோம் என்பதை மாற்றாது. நாங்கள் கடந்த டி20 உலகக்கோப்பையிலும் காம்பினேஷனுக்காக அவரை தேர்வு செய்ய முடியாமல் போனது துரதிஷ்டவசமானது”
இதையும் படிங்க : 2026 டி20 WC.. இந்திய அணி அறிவிப்பு.. கில் அதிரடி நீக்கம்.. 2 புதிய வீரர்களுக்கு வாய்ப்பு – சற்றுமுன் வெளியான பட்டியல்
“நாங்கள் மீண்டும் ஒரு முறை அவரை தவற விட்டு இருக்கிறோம். இது ஒரு வீரரின் திறன் பற்றியது கிடையாது. இது அணியின் சமநிலை பற்றியது. எங்களுக்கு மேல் வரிசையில் பேட்டிங் தொடங்கக்கூடிய இரண்டு விக்கெட் கீப்பர்கள் தேவைப்பட்டார்கள். இந்த காம்பினேஷன் ஆகவே நாங்கள் அவரை தேர்வு செய்ய முடியவில்லை” என்று கூறி இருக்கிறார்.






