228 ரன் 4 விக்கெட்.. இங்கிலாந்து வெல்லுமா?.. ஹெட் ருத்ரதாண்டவம்.. லயன் திருப்புமுனையில் ஆஸி முன்னிலை

0
54
Lyon

தற்போது நடைபெற்று வரும் ஆசஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வெல்ல, இங்கிலாந்து அணிக்கு கைவசம் நான்கு விக்கெட்டுகள் இருக்க 228 ரன்கள் தேவைப்படுகிறது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணிக்கு அலெக்ஸ் கேரி 103 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 371 ரன்கள் குவித்தது. ஆர்ச்சர் 5 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

முன்னிலை பெற்ற ஆஸி

இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்து அணி 281 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. அந்த அணிக்கு கேப்டன் ஸ்டோக்ஸ் 83 ஆர்ச்சர் 51 ரன்கள் எடுத்தார்கள். கம்மின்ஸ் மற்றும் போலண்ட் தலா மூன்று விக்கெட் வீழ்த்தினார்கள்.

இதைத்தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு டிராவிஸ் ஹெட் 170 ரன்கள் அலெக்ஸ் கேரி 73 ரன்கள் எடுத்தார்கள். ஆஸ்திரேலியா அணி 349 ரன்கள் மீண்டும் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் ஜோஸ் டங் நான்கு விக்கெட் வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு 435 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

கம்மின்ஸ் லயன் அபாரம்

மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாட வந்த அணியின் பென் டக்கெட் 4, ஒல்லி போப் 17, ஜோ ரூட் 39 ரன்கள் என கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்கள். இதற்கு அடுத்து இங்கிலாந்து அணி கொஞ்சம் ரன்கள் எடுத்து விக்கெட் கொடுக்காமல் விளையாட வந்தது.

இதையும் படிங்க : எனக்கு இந்த போட்டியில கொடுக்கப்பட்ட வேலை இதுதான்.. இந்த 3 பேருக்கு விருதை சமர்ப்பிக்கிறேன் – வருண் சக்கரவர்த்தி பேச்சு

இந்த நிலையில் ஹாரி புரூக் 30, ஜாக் கிரவுலி 85 மற்றும் கேப்டன் ஸ்டோக்ஸ் 5 ரன்கள் என அடுத்தடுத்து நாதன் லயன் பந்துவீச்சில் விழுந்தார்கள். இன்று நான்காவது நாள் முடிவில் இங்கிலாந்து அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்திருக்கிறது. நாளை ஐந்தாவது நாளில் இங்கிலாந்து வெற்றிக்கு கைவசம் நான்கு விக்கெட் இருக்க 228 ரன்கள் தேவைப்படுகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டியை தோற்று இருப்பதால், இந்த மூன்றாவது போட்டியையும் தோற்றால் இங்கிலாந்து தொடரை இழந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -