ஜோஸ் இங்லீஷை விட மாட்டோம்.. பிசிசிஐ கிட்ட புகார் கொடுப்போம்.. பஞ்சாப் கிங்ஸ் எடுக்கும் முக்கிய முடிவு – வெளியான தகவல்கள்

0
17
Inglis

இந்த வருடம் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஜோஸ் இங்லீஷ் குறித்து அந்த அணி நிர்வாகம் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் புகார் கொடுக்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.

தற்போது லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் ஜோஸ் இங்லீஷ் 8 கோடிக்கு மேல் கொடுத்து எடுத்திருக்கிறது. கடந்த முறை அவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அடிப்படை விலையில் 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டிருந்தார்.

- Advertisement -

பஞ்சாப் வெளியேற்றியது ஏன்?

ஜோஸ் இங்லீஷ் தனக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும், இதன் காரணமாக தான் கொஞ்சம் ஓய்வெடுத்து மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் தயாராக வேண்டும் எனவும், வீரர்களை தக்க வைப்பதற்கு கடைசி நாளில் 45 நிமிடங்களுக்கு முன்னால் தெரிவித்ததாக பஞ்சாப் கிங்ஸ் உரிமையாளர் கூறியிருந்தார்.

இதன் காரணமாக அவரை தாங்கள் விடுவிக்க வேண்டியது இருந்ததாகவும், ஆனால் அவர் செய்தது நியாயம் இல்லை என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் ஜோஸ் இங்லீஷ் மே மாதத்தில் இரண்டு வாரம் மட்டுமே ஐபிஎல் தொடரில் தன்னால் விளையாட முடியும் என்று பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகத்திடம் தெரிவித்திருக்கிறார். இதனால் அந்த அணி நிர்வாகம் அவரை வெளியே விட்டிருக்கிறது.

- Advertisement -

முடிவில் திடீர் மாற்றம்

தற்போது ஜோஸ் இங்லீஷ் அதிகபட்சமாக 8 கோடி ரூபாய்க்கு விலை போயிருக்கின்ற காரணத்தினால், அவர் தன்னுடைய தேனிலவுத் திட்டங்களை தள்ளி வைத்துவிட்டு லக்னோ அணிக்காக அதிக வாரங்கள் விளையாட முடிவு செய்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் அதிருப்தி அடைந்திருக்கிறது.

இதையும் படிங்க : சிஎஸ்கே கிடையாது.. இந்த ரெண்டு டீம்தான் ஏலத்துல சூப்பர்.. கப் அடிக்கவும் வாய்ப்பு – பத்ரிநாத் கணிப்பு

இந்த நிலையில் ஜோஸ் இங்லீஷ் தகவல் தொடர்பில் தவறு செய்திருப்பதாக பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் புகார் கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை இந்த புகாரை இந்திய கிரிக்கெட் வாரியம் எடுத்துக் கொண்டு விசாரித்து, உண்மை பஞ்சாப் கிங்ஸ் அணியின் பக்கம் இருந்தால் ஜோஸ் இங்லீஷ் விளையாட தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -