சிஎஸ்கே அணிக்கு ஒரே ஒரு கவலை தான்.. இந்த விசயத்தில் குழப்பம்..முன்னாள் வீரர்கள் கருத்து

0
87

ஐபிஎல் 2026 ஏலத்திற்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ்  அணியில் ஒரு சிக்கல் இருப்பதாக முன்னாள் ஆர்சிபி பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கருத்து தெரிவித்தார். CSK-இன் புதிய பந்தை யார் பயன்படுத்துவார்கள் என்பது அடுத்த சீசனில் ஒரு கவலையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அணி மீண்டும் கலீல் அஹ்மத் மீதும், இம்முறை நாதன் எல்லிஸ் மீதும் அதிகம் சார்ந்திருக்க வேண்டியிருக்கும் என்று அவர் தெரிவித்தார். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மாட் ஹென்ரியை அவர்கள் ₹2 கோடிக்கு வாங்கியுள்ளனர்.இந்திய உள்நாட்டு நட்சத்திரங்களான பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மாவை தலா ₹14.20 கோடிக்கு வாங்கினர்.

- Advertisement -

சிஎஸ்கே கவலை:

இது IPL வரலாற்றில் இரண்டு சாதனை ஏலங்கள் ஆகும். இது குறித்து பேசிய சஞ்சய் பங்கர்,  “CSK-க்கு கவலை புதிய பந்து தாக்குதல் தான். அவர்கள் எல்லிஸ் மீது அதிகம் சார்ந்திருப்பார்கள். கலீல் அனைத்து போட்டிகளிலும் ஆடுவார் என்று நினைக்கிறேன்.அது தான் அவர்களின் கவலை அம்சம். சேப்பாக்குக்கு வெளியே ஆடும்போது மாட் ஹென்ரியை ஆட வைப்பார்கள் போல.”

“அதுதான் இங்கு பிரச்சனை. கடந்த ஆண்டு ராகுல் திரிபாதி மற்றும் தீபக் ஹூடாவை ஏன் ஆட வைக்கிறார்கள் என்று கேட்டோம், அதனால் அவர்கள் தைரியமான மாற்றங்களை செய்துள்ளனர். நான்கு நிறுவப்பட்ட பேட்ஸ்மேன்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். சைக்கிளின் நடுவில் ஒட்டுமொத்தமாக நன்றாக செய்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.

- Advertisement -

குழப்பமாக இருக்கிறது:

சிஎஸ்கே குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரர் அபினவ் முகுந்த்,  “டாப் செவனில் இரண்டு பேட்ஸ்மேன்களைத் தவிர அனைவரும் புதியவர்கள். ஒரே ஆண்டில் மெகா மாற்றத்தை முடிவு செய்துள்ளனர். மாற்று வீரர்கள் தேர்வில் அதிர்ஷ்டம் அடைந்தனர். இது ஒரு பெரிய ரீசெட். கிரீன் 25, ஹோல்டர் போன்றவர்களைத் துரத்தினர். பிறகு மாட் ஷார்ட்டை எடுத்தனர்.”

இதையும் படிங்க: எனக்கு அந்த சிஎஸ்கே வீரர் தான் வேணும்.. ஏலத்தில் நிறைவேறாத ரிஷப் பண்ட் ஆசை – லக்னோ உரிமையாளர் வெளியிட்ட தகவல்

“பிறகு மாட் ஹென்ரி. வெளிநாட்டு தேர்வுகளில் தெளிவு இல்லை என்று தோன்றியது. கொஞ்சம் குழப்பமாக உள்ளது.கேலியாக சொல்வதென்றால், CSK-இன் பாதி அணி கேகேஆர்க்கு சென்றுவிட்டது. பதிரானா 18 கோடிக்கு  சென்றது ஆச்சரியம். அவர் இலங்கைக்கு தொடர்ந்து ஆடுவதில்லை. ஆனால் டெத் ஓவர்களுக்கு ஒரு பௌலரை வேண்டும் என்று நினைத்திருக்கலாம். எனக்கு சுவாரஸ்யமாக இருந்தது,” என்றார்.

- Advertisement -