28.40 கோடி.. சிஎஸ்கே ஏலத்தில் சாதனை.. யார் இந்த பிரசாந்த் வீர் கார்த்திக் சர்மா? – சுவாரசிய தகவல்கள்

0
496
IPL

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே இந்திய உள்நாட்டு வீரர்களான பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மா இருவரையும் சாதனை விலைக்கு வாங்கி இருக்கிறது.

இன்று நடைபெற்று வரும் ஏலத்தில் ஏற்கனவே தங்களை நிரூபித்து இருக்கும் பெரிய வீரர்களின் பக்கமாக சிஎஸ்கே செல்லவே இல்லை. தொடர்ந்து சிஎஸ்கே பொறுமையாக இருந்து யாரும் எதிர்பார்க்காத விலைக்கு இந்திய உள்நாட்டு இளம் வீரர்களை வாங்கி இருக்கிறது.

- Advertisement -

யார் இந்த பிரசாந்த் வீர்?

சிஎஸ்கே அணி முதலில் வெஸ்ட் இண்டீஸ் சேர்ந்த அகேல் ஹுசைனை அடிப்படை விலையான இரண்டு கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதைத் தொடர்ந்து ஹைதராபாத் அணிவுடன் தொடர்ந்து போராடி இந்திய உள்நாட்டு இளம் வீரர் பிரசாந்த் வீரை 14.20 கோடி ரூபாய்க்கு வாங்கியது. ஒரு அன்கேப்ட் இந்திய வீரரின் அதிகபட்ச விலை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக ஆவேசஸ் கான் 10 கோடி ரூபாய்க்கு டெல்லியில் வாங்கப்பட்டு இருந்தார்.

பிரசாந்த் வீர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இடது கை சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ஆவார். மேலும் இவர் சையத் முஸ்டாக் அலி தொடரில் 169 ஸ்ட்ரைக் ரேட்டில் 112 ரன்கள் மற்றும் ஓவருக்கு 6.76 ரன்கள் கொடுத்து ஒன்பது விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். இவரை ரவீந்திர ஜடேஜாவுக்கு மாற்று வீரராக சிஎஸ்கே பார்க்கிறது.

- Advertisement -

யார் இந்த கார்த்திக் சர்மா?

ராஜஸ்தான் அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக கார்த்திக் சர்மா இருந்து வருகிறார். இவர் 12 டி20 போட்டிகளில் 164 ஸ்ட்ரைக் ரேட்டில் 334 ரன்கள் குவித்திருக்கிறார். இவர்கள் இருவருக்குமே 19 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவரை கொல்கத்தா போட்டி போட்டு அதே 14.20 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே வாங்கியது.

இதையும் படிங்க: சிஎஸ்கே போட்ட பிரில்லியன்ட் பிளான்.. பதிரனாவுக்கு அடித்த ஜாக்பாட் – மாறிய நிலவரங்கள்

சிஎஸ்கே தங்களது வழக்கமான பாணியில் இருந்து அனுபவ வீரர்கள் மேல் முதலீடு செய்வதை விட்டு இளம் வீரர்கள் மேல் முதலீடு செய்திருக்கிறது. இன்னும் ஒரு வருடம் தாண்டிய பிறகு இவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்றால், அடுத்த மெகா ஏலத்தில் இவர்களை வெறும் நான்கு கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே அணியால் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -