கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பந்துவீச்சில் இந்திய அணி சிறப்பாக விளங்கியதால் எளிதாக இரண்டாவது வெற்றியை பெற்றது.
இந்த சூழ்நிலையில் மூன்றாவது போட்டியில் சிறப்பாக விளையாடிய பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா இந்த போட்டி குறித்த சில சுவாரசியமான கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்.
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்று ஒரு நாள் தொடரில் தோல்வி அடைந்தது. இந்த சூழ்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையே டி20 தொடர் நடைபெற்று வரும் நிலையில் மூன்றாவது போட்டியில் பும்ராவிற்கு பதிலாக களம் இறங்கிய ஹர்சித்ராணா பந்து வீச்சில் கலக்கினார்.
இரண்டு விக்கெட் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இந்த சூழ்நிலையில் அஷ்தீப் சிங் குறித்து பேசி இருக்கும் ஹர்சித்ராணா பவுலிங்கில் தனக்கு மிகவும் அவர் உறுதுணையாக இருப்பதாகவும், அவர் தன்னுடன் சேர்ந்து பந்து வீசும் போது தனது வேலை எளிதாகிறது என்றும் பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “முதலாவதாக புதிய பந்தில் பந்து வீசும் போது அவரோடு சேர்ந்து வீசுவதை நான் எப்போதும் விரும்பவில்லை. ஏனென்றால் அவர் ஒரு முனையில் இருந்து அழுத்தத்தை எப்போதும் உருவாக்குவார். என் கையில் இருக்கும் திறமைகளை கொண்டு அவருக்கு நான் துணையாக இருக்க விரும்புகிறேன். அவரோடு சேர்ந்து பந்து வீசுவதே ரசிக்கிறேன் அவருக்கு நிறைய திறமை இருக்கிறது. அவரிடம் இருந்து எனக்கு நிறைய உதவிகள் கிடைக்கிறது.
இதையும் படிங்க:எனக்கு சேர்ந்து விளையாட அவர்தான் வேணும்.. நான் இந்த உதவி பண்ணினாலே போதும் – ஹர்ஷித் ராணா பேட்டி
மேலும் தர்மசாலா மைதானத்தில் பந்து வீசுவது இதுதான் முதல் முறை நான் இதற்கு முன்பு இங்கு விளையாடியதில்லை. இங்கு பந்து வீசுவது எனக்கு மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. இங்குள்ள வானிலையும் எனக்கு நல்ல நிலையில் உதவுகிறது” என்று அவர் பேசியிருக்கிறார். இந்திய அணி ஏற்கனவே இரண்டு போட்டிகள் வெற்றி பெற்றுள்ள நிலையில் கடைசி இரண்டு போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்ற தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






